- கணினி keyboard’ல எழுத்துக்கள் ஏன் வரிசையாக இல்லாமல் கலைந்துள்ளன?
- கணினியின் கீ-போர்டு ல் உள்ள எழுத்துகள் Alphabetic வரிசையில் இல்லாமல் கலைந்து இருப்பதற்கான காரணம் உள்ளது.
- கணினி கண்டுபிடிக்கப்பட்ட ஆரம்ப காலங்களில் கீ போர்டானது abcd எனும் ஆங்கில எழுத்துக்களின் வரிசையிலேயே அமைந்திருந்தன.
- அப்படி இருந்ததால் அதில் தட்டச்சு செய்ய சற்று சிரமமாக இருந்ததை உணர்ந்தனர்.
- அதனால் அவற்றை மாற்ற முடிவு செய்தனர்.
- பலமுறை முயற்சி செய்த பின் இந்த வடிவத்தை உருவாக்கினர்.
- அது சரி இந்த வடிவத்தை ஏன் உருவாக்கினார்கள்? என்ற கேட்டால், இதற்கு ஒரு காரணம் உண்டு.
- பொதுவாக நீங்கள் கீ போர்டின் இடப்பக்க மேல் மூலையில் காணும்போது உள்ள எழுத்து Q.
- அதைப் போன்றே கீழ்ப்பக்க இடமூலையில் உள்ள எழுத்து Z.
- இவ்வாறு ஒவ்வொரு எழுத்தும் பயன்படுத்தப்படும் முறைகளை வைத்து அதனை ஒழுங்குபடுத்தியுள்ளனர்.
- Q மற்றும் Z எழுத்துகளை நாம் ஆங்கிலத்தில் அவ்வப்போது மட்டுமே பயன்படுத்துவோம்.
- ஆனால் ASDFGHJKL முதலிய எழுத்துக்களை அதிகமாக பயன்படுத்துவோம்.
- அதிகமாக பயன்படுத்தப்படும் எழுத்துக்களான ASDFGHJKL முதலியவற்றை ஒரே வரிசையில் கொண்டு வந்தனர்.
- நடுவரிசை எழுத்துகள்தான் பெரும்பாலான வார்த்தைகளில் இடம் பெற்றிருக்கும்.
- மட்டுமன்றி அதில் அடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பொத்தானுக்கு மேல் உள்ள மற்றும் கீழ் உள்ள எழுத்துகள் ஒன்றோடோன்று வார்த்தைகளில் பெரும்பாலும் இணைந்து வரக்கூடியதாக இருக்கும்.
- இப்போது நீங்கள் ஒரு கீபோர்டை பார்த்தால் அதில் ஒவ்வொரு எழுத்துகளுக்கு அருகில் உள்ள எழுத்துகள் தான் பெரும்பாலும் அவற்றின் அருகில் வரும்.
- உதாரணமாக, A க்கு அருகில் S உள்ளதென்றால் பெரும்பாலும் A எழுத்திற்கு அடுத்த எழுத்தாக S வரும் என்பதை வைத்து அதை உருவாக்கியுள்ளனர்.
- இவ்வாறு ஆங்கிலத்தில் பொதுவாக எந்தெந்த எழுத்துகள் அதிகமாக இணைந்து வரும், எந்தெந்த எழுத்துகள் குறைவாக வரும் முதலியவற்றை ஆராய்ந்து இவ்வகையை உருவாக்கியுள்ளனர்.
- இவ்வாறு வார்த்தைகளின் அடிப்படையில் எழுத்துகளை வைத்துள்ளமையால்தான் அவை கலைந்து உள்ளன.
தமிழ் கோராவில்
அருண் (Arun)
Social Plugin
Social Plugin