இஸ்ரோ புதிய 'NavIC' என்ற இந்திய ஜிபிஎஸ் சேவையை ஆதரிக்கக்கூடிய சிப்செட்களை உருவாக்குவது குறித்து குவால்காம் மற்றும் பிராட்காம் போன்ற சிப் உற்பத்தியாளர் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கடந்த வாரம் செய்திகள் வெளியாகியது. தற்பொழுது அந்த பேச்சு வார்த்தை ஒரு முடிவிற்கு வந்துள்ளது.
மூன்று புதிய சிப்செட்கள்
குவால்காம் நிறுவனம் தற்பொழுது மூன்று புதிய சிப்செட்களை வெளியிட்டுள்ளது. இந்த மூன்று புதிய சிப்செட்களும் இந்தியாவின் நேவிக் செயற்கைக்கோள் சேவைகளை ஆதரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மூன்று சிப்செட்களும் இஸ்ரோவில் உள்ள மேதைகளால் உருவாக்கப்பட்டுள்ளது.
NavIC சேவை
இந்தியப் பிராந்திய ஊடுருவல் செயற்கைக்கோள் அமைப்பின் (IRNSS) செயல்பாட்டுப் பெயர் தான் நாவிக் (NavIC). NavIC என்பது குளோபல் பொசிஷனிங் சிஸ்டத்தின் (ஜி.பி.எஸ்) இந்தியப் பதிப்பாகும். இஸ்ரோவின் இந்த புதிய NavIC சேவை ரஷ்யாவின் க்ளோனாஸ், ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் கலிலியோ மற்றும் ஜப்பானின் QZSS சேவைக்கு எதிராகப் போட்டியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய ஸ்னாப்டிராகன் சிப்செட்கள்
குவால்காமின் சமீபத்திய ஸ்னாப்டிராகன் 720 ஜி, 662 மற்றும் 460 போன்ற சிப்செட்களை NavIC சேவைக்கான ஆதரவுடன் வெளியிட்டுள்ளது. இவை நடுத்தர அடுக்கு செயல்திறன் கொண்ட சிப்செட்களுக்கான பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களில் காணப்படும் சிப்செட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
துல்லியத் தகவல்
ஜி.பி.எஸ் மற்றும் பிற செயற்கைக்கோள் பொருத்துதல் சேவைகளுக்கு மாறாகச் சிறந்த மற்றும் துல்லியமான ஜி.பி.எஸ் அளவீடுகளை வழங்க, NavIC இந்தியப் பயனர்களை மட்டும் கவனமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இஸ்ரோவின் கூற்றுப்படி, NavIC சுமார் 5 மீட்டர் வரை துல்லியத் தகவலை வழங்குகிறது.
3ஜிபிபி அனுமதி
இந்த புதிய இந்திய ஜி.பி.எஸ் சேவை இரட்டை அதிர்வெண் எஸ் மற்றும் எல் பேண்டுகளை ஆதரிக்கிறது. அதேபோல் 3ஜிபிபி (3GPP) முன்பே நாவிக் சிப்செட்களுக்கான அனுமதியை வழங்கிவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இஸ்ரோவின் NavIC ஆதரவுடன் களமிறங்கும் சாதனம்
தற்பொழுது கிடைத்துள்ள தகவலின்படி சியோமி நிறுவனம் நாவிக் ஆதரவுடன் கிடைக்கும் சிப்செட்களை வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகிறது. சியோமி ஸ்மார்ட்போன் சாதனங்கள் தான் இஸ்ரோவின்NavIC ஆதரவுடன் களமிறங்கும் முதல் சாதனங்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment
0 Comments