எந்த சந்தேகமும் இல்லாமல் ஆண்ட்ராய்டு தான் சிறந்த மொபைல் இயங்குதளமாக திகழ்கிறது, நீங்கள் விரும்பும் வழியில் கருவிகளை அமைத்துக்கொள்ள ஆண்ட்ராய்டு உதவுகிறது. எனினும், ஆண்ட்ராய்டிலும் சில குறைபாடுகள் உள்ளன.
அம்மாதிரியான ஆண்ட்ராய்டு பிரச்சினைகளில் ஒன்றுதான் உங்கள் மொபைல் ஸ்க்ரீன் ஆப் ஆன பின்பு யூட்யூப் வீடியோ ஸ்ட்ரீம் அனுமதிக்கப்பட மாட்டாது. இது கிட்டத்தட்ட ப்ரீ லோடட் யூட்யூப் ஆப் கொண்ட ஒவ்வொரு ஆண்ட்ராய்டு மொபைலிலும் ஏற்படும் ஒரு பிரச்சனையாகும். அதை சரி செய்வது எப்படி.?
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
வழிமுறை #01
தொலைபேசி 'திரை அணைக்கப்படும் போது கூட யூட்யூப் வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்ய நீங்கள் உங்கள் ஆண்டராய்டு சாதனத்தில் மொசில்லாபயர்பாக்ஸ் ப்ரவுஸரை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
வழிமுறை #02
இப்போது, நீங்கள் பதிவிறக்கம் செய்த பயர்பாக்ஸ் ப்ரவுஸரில் இருந்து youtube.com வலைத்தளம் செல்லவும். இந்த நடைமுறை குறிப்பிட்ட ப்ரவுஸரில் மட்டுமே வேலை செய்யும் என்பதால் நீங்கள் பயர்பாக்ஸ் ப்ரவுஸர் பயன்படுத்துவதை உறுதிசெய்யவும்.
தளத்தில் நுழைந்த பின், அது முற்றிலும் லோட் ஆகும்வரை காத்திருக்கவும். இப்போது, வலது மேல் பக்கத்தில் மூன்று டாட் உள்ள மெனு ஆப்ஷனை அழுத்தவும், பின்னர் டெஸ்க்டாப் தளம் மீதான ரெக்குவஸ்ட் மீது கிளிக் செய்யவும்.
வழிமுறை #04
அடுத்து, நீங்கள் உங்களுக்கு பிடித்தமான பாடல்களின் பட்டியலை ப்ளே செய்ய வேண்டியதுதான். உங்கள் பரவுஸர் மூடப்பட்ட பின்பும் உங்கள் சாதனத்தின் திரை அணைக்கப்பட்ட பின்பும் பின்னணியில் பாடல்களை இயங்குவதை பார்ப்பீர்கள்.
Social Plugin
Social Plugin