Type Here to Get Search Results !
Tamil TV Channels | Tamil TV Online | Tamil News Live Tamil TV Channels, Tamil TV, Tamil Channels, Tamil TV Online, Tamil TV Live, Tamil News Live, Watch Tamil TV Live. Watch the most popular Tamil TV Channels

ஒன்றுக்கு மேற்பட்ட பைல்களின் பெயர்களை மாற்ற F2 கீ அழுத்தினால் கிடைக்கும் நன்மைகள்!

பொதுவாக பைல் ஒன்றின் பெயரை மாற்ற, அதில் ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில், 'Rename' என்பதைத் தேர்ந்தெடுத்து மாற்றுவோம். இந்த வேலையெல்லாம் மேற்கொள்ளாமல், F2 கீ அழுத்தினால், புதிய பெயர் அமைப்பதற்கு வழி காட்டப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட பைல்களின் பெயர்களை மாற்றவும் இந்த எப்2 கீ பயன்படும். 

இதனை மேற்கொள்ள, முதலில், பெயர் மாற்ற வேண்டிய அனைத்து பைல்களையும் தேர்ந்தெடுக்கவும். அதன் பின்னர் எப்2 கீயை அழுத்தவும். இதன் பின்னர், பொதுவான பெயர் ஒன்றை அமைக்கவும். உங்களுடைய பிரச்னையில், எந்த ஊரில் எடுத்த போட்டோக்களை, அல்லது விழாவில் எடுத்த போட்டோ பைல்களின் பெயர்களை மாற்றி அமைக்க வேண்டுமோ, அந்த ஊரின் பெயர் அல்லது விழாவின் பெயரை (Madurai / My Bday) அமைக்கலாம். இதன் பின்னர், என்டர் கீ அழுத்தவும். 
இதனைச் செய்தவுடன், விண்டோஸ் சிஸ்டம், தானாகவே, நீங்கள் தேர்ந்தெடுத்த போட்டோக்களின் பைல் பெயர்களுடன், 1,2,3 என இணைத்துக் கொள்ளும். எடுத்துக் காட்டாக, Madurai1, Madurai2 என அமைக்கும். ஒவ்வொன்றாக வெவ்வேறு பெயரில் அமைக்க, அனைத்து பைல்களையும் தேர்ந்தெடுத்த பின்னர், பெயர் கொடுத்துவிட்டு, TAB கீ அழுத்தவும். உடன் அந்த பெயர் சேவ் செய்யப்பட்டு, அடுத்த பைல் புதிய பெயர் எடுத்துக் கொள்ள தயாராகும். ஏதேனும் ஒரு பைலை இது போல மாற்ற வேண்டாம் என எண்ணினால், இருமுறை டேப் கீ அழுத்தவும். 
இன்னொரு கொசுறு செய்தி விண்டோஸ் 10 குறித்து தரட்டுமா? புதிய போல்டர் ஒன்று உருவாக்க வேண்டுமா? CTRL+SHIFT+N என்ற கீகளை தொகுப்பாக அழுத்தவும். இது விண்டோஸ் 7 / 8 மற்றும் விண்டோஸ் 10 சிஸ்டங்களில் செயல்படும்.
                                                                                                               நன்றி:
                                                                                                             தி.மலர்

List Grid

6/lgrid/recent