உலக ஸ்மார்ட்போன் சந்தையை ஆளுவதாக மார்தட்டிக்கொள்ளும் இதர நிறுவனங்களின் அதிநவீன, சிறப்பம்சங்கள் கொண்ட ஹை-எண்ட் ஸ்மார்ட்போன்களை தோற்கடிக்க நோக்கியா நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் அல்ல, நோக்கியா பிராண்ட் பீச்சர் கருவியான நோக்கியா 3310 கருவியே போதுமானது என்பதற்கு இதோ ஒரு வெளிப்படையான ஆதாரம்.!
போனரெனா சமீபத்தில் நிகழ்த்திய ஒரு ஒப்பீட்டில் புதிதாக வெளியான நோக்கியா 3310 கருவியின் 2எம்பி கேமராவிற்கும் மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்7 கருவியின் 12எம்பி கேமராவிற்கும் இடையே ஒரு போட்டியை நிகழ்த்தியது. அதன் முடிவுகள் கற்பனைக்கு எட்டாத ஒன்றாய் இருந்தன. ஒருவேளை நீங்கள் ஒரு எஸ்7 கருவியின் உரிமையாளர் என்றால் மேற்கொண்டு படித்து உங்கள் மனதை காயபப்டுத்திக்கொள்ள வேண்டாம்.!
நேரடி போட்டி
இந்த நேரடி போட்டியில் மிகவும் வியக்கத்தக்க வண்ணம் நோக்கியா 3310 வெற்றி கண்டுள்ளது. வாயால் சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள் என்று எனக்கு தெரியும், இதோ புகைப்பட ஒப்பீடு ஆதாரம் நீங்களே பாருங்கள்.!
நோக்கியா 3310
இது நோக்கியா 3310 கருவியின் 2 எம்பி கேமராவின் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படம்.!
கேலக்ஸி எஸ்7
இது அதே இடத்தில், அதே ஒளியியலில் கேலக்ஸி எஸ்7 கருவியின் 12 எம்பி கேமராவின் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படம்.!
நோக்கியா 3310
இது நோக்கியா 3310 கருவியின் மூலம் எடுக்கப்பட்ட ஒரு அவுட் டோர் புகைப்படம்.!
கேலக்ஸி எஸ்7
இது அதே அவுட் டோரில் அதே ஒளியியலில் கேலக்ஸி எஸ்7 கருவியின் 12 எம்பி கேமராவின் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படம்.!
நோக்கியா 3310
இது நோக்கியா 3310 கருவியின் 2 எம்பி கேமராவின் மூலம் எடுக்கப்பட்ட ஒரு உணவு பண்டத்தின் புகைப்படம்.!
கேலக்ஸி எஸ்7
இது அதே ஒளியியலில் அதே உணவு பண்டத்தை கேலக்ஸி எஸ்7 கருவியின் 12 எம்பி கேமராவின் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படம்.!
இதர சிறப்பம்சங்கள்
நோக்கியா 3310 கருவியின் இதர சிறப்பம்சங்கள் என்று பார்க்கையில் டிஸ்ப்ளே தொழில்நுட்பம் என்று வரும்போது புதிய நோக்கியா 3310 ஆனது கிளாசிக் 3310 கருவியை விட பல மெயில் தூரம் அதிக பாய்ச்சலை வழங்குகிறது. அதாவது வண்ணத்திரை கொண்டுள்ளது. வழக்கற்றுபோன ஒற்றை நிற காட்சிகள் காலம் மாறி வண்ண திரை கொண்டு நோக்கியா 3310 வெளியாகும் என்பது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்.
120 பிபிஐ பிக்சல் அடர்த்தி
இந்த புதிய நோக்கியா 3310 ஆனது 120 பிபிஐ பிக்சல் அடர்த்தி கொண்ட ஒரு 2.4 அங்குல டிஸ்ப்ளே கொண்டு வருகிறது. இதன் மூலம் 3310 டிஸ்ப்ளே ஆனது பெரிய புரட்சி என்றில்லாமல் ஒரு போதுமான அளவு கொண்ட டிஸ்ப்ளேவாக இருக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
கர்வுடு ஸ்க்ரீன் விண்டோ
அதுமட்டுமின்றி நோக்கியா பிராண்ட் கருவிகளை தயாரிக்கும் உரிமைகளை பெற்றுள்ள எச்எம்டி நிறுவனம், புதிய நோக்கியா 3310 கருவியின் துருவமுனைப்பட்ட (போலரைஸ்டு) மற்றும் கர்வுடு ஸ்க்ரீன் விண்டோ, சூரிய ஒளியில் நல்ல வாசிப்பு திறனை வழங்கும் என்றும் கூறியுள்ளது.
கேமரா
இந்த புதிய நோக்கியா 3310 கருவி அதன் முன்னோடி போலல்லாமல் ஒரு எல்இடி ப்ளாஷ் கொண்ட ஒரு 2 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்டுள்ளது, செல்பீ கேமரா கிடையாது. இந்த கேமரா எளிய புகைப்படங்களை பதிவு செய்ய உதவும். எனவே உயர் தீர்மான புகைப்படங்களை இந்த கருவியின் மூலம் எதிர்பார்க்க வேண்டாம் என்று வெளிப்படையாக கூறிவிட்டது எச்எம்டி நிறுவனம். இருப்பினும் நோக்கியா 3310 கருவியின் 2எம்பி கேமரா சிறப்பாக செய்லபடுவதை நாம் காண முடிகிறது.
ஸ்னேக் கேம்
ஸ்னேக் கேம் - ஞாபகம் இருக்கிறதா.??? - அந்தக்காலத்து போதையான வீடியோ கேம் ஆன நோக்கியா 3310 பிரபல ஸ்னேக் கேம் ஆனது அப்டேட் செய்யப்பட்டு இந்த புதிய நோக்கியா 3310 கருவியிலும் இடம் பெற்று நம்மை மீண்டும் அடிமைபப்டுத்த வருகிறது.
மல்டிகலர்டு
அதே எளிய நான்கு பொத்தான் கேம் ஆன ஸ்னேக் இந்த புதிய பதிப்பில் அதற்கே உரிய எளிய 2டி கேம் ஆக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒரே மாற்றம் என்னவென்றால் பழைய ஒரு ஒரே வண்ணமுடைய தோற்றத்திற்கு பதிலாக ஒரு மல்டிகலர்டு கலை பாணியில் வெளியாகியுள்ளது.
கொடூரமான பேட்டரி லைஃப்
எல்லாவற்றிக்கும் மேலாக நவீன கால ஸ்மார்ட்போன்களை தூக்கி சாப்பிடும் வண்ணம் புதிய நோக்கியா 3310 ஒரு "கொடூரமான பேட்டரி லைஃப்" கொண்டுள்ளது. பழைய கருவியை விட 10 மடங்கு அதிகமான பேட்டரி திறன் கொண்டு இக்கருவி வெளியிடப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ தளத்தில் இக்கருவி ஒரு மாத காலம் காத்திருப்பு நேரம் மற்றும் 22 மணி நேர பேச்சு நேரம் வழங்குமென்று குறிப்பிடப்பட்டுள்ளது.!
விலை
இந்த புத்தம்புதிய நோக்கியா 3310 கருவியானது அதன் அசலை போன்றே ஒரு மலிவு விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த புதிய தொலைபேசியானது 49 யூரோக்கள் என்ற விலை ஐரோப்பாவில் கிடைக்கும் அதாவது இந்தியாவில் ரூ. 3450/- என்ற விலை நிர்ணயம் பெறும். இந்தியா உட்பட பிற பகுதிகளில் புதிய நோக்கியா 3310 கருவி சார்ந்த விலைகள் அறிவிக்கப்படவில்லை என்ற போதிலும் ரூ.3450/- என்ற ஒரு அடைப்புக்குறிக்குள் தான் விலை நிர்ணயம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Social Plugin
Social Plugin