Type Here to Get Search Results !
Tamil TV Channels | Tamil TV Online | Tamil News Live Tamil TV Channels, Tamil TV, Tamil Channels, Tamil TV Online, Tamil TV Live, Tamil News Live, Watch Tamil TV Live. Watch the most popular Tamil TV Channels

அக்கவுண்டில் இருக்கும் பணம் பத்திரமாக இருக்க வேண்டுமென்றால்.. இந்த முக்கிய எச்ச்ரிக்கை முழுக்க முழுக்க உங்களுக்கானது தான்!!

ஐசிஐசிஐ (ICICI) வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கிறது என்றால்.. அந்த அக்கவுண்டில் இருக்கும் பணம் பத்திரமாக இருக்க வேண்டுமென்றால்.. ஐசிஐசிஐ வங்கி விடுத்துள்ள இந்த முக்கிய எச்ச்ரிக்கை முழுக்க முழுக்க உங்களுக்கானது தான். என்ன எச்சரிக்கை? என்ன செய்ய வேண்டும்? இதோ விவரங்கள்:

தீங்கிழைக்கும் லிங்க்குகள் மற்றும் ஃபைல்களுக்கு (Malicious links and files) எதிராக மிகவும் விழிப்புடன் இருக்குமாறு ஐசிஐசிஐ வங்கி தனது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் திடீர் எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஏனென்றால் தீங்கு விளைவிக்கும் ஃபைல்களைப் பதிவிறக்கம் செய்ய வைப்பதன் மூலம் அல்லது தீங்கிழைக்கும் லிங்க்களை கிளிக் செய்ய வைப்பதன் மூலம் பணத்தை திருடும் புதுவகை சைபர் குற்றங்கள் (New Type Cyber Crimes) பதிவாகியுள்ளது போல் தெரிகிறது!

இந்த தப்ப செஞ்சிடாதீங்க! ICICI Bank கஸ்டமர்களுக்கு வார்னிங்!


இதில் சிக்கும் வாடிக்கையாளர்களின் மொபைல் போனில் இருந்து ஒடிபி (OTP) உட்பட பல முக்கியமான தகவல்களை தானாகவே ஃபார்வேட் (Forward) செய்யப்படும். ஆகவே வாடிக்கையாளர்களை விழிப்புடன் இருக்கும்படியும், சந்தேகத்திற்குரிய அல்லது தீங்கிழைக்கும் ஆப்களை தங்கள் ஸ்மார்ட்போன்களில் இன்ஸ்டால் செய்ய வேண்டாம் என்றும் ஐசிஐசிஐ வங்கி கேட்டு கொண்டுள்ளது.

ஐசிஐசிஐ வங்கி ஆனது அதன் வாடிக்கையாளர்களுக்கு எந்த ஒரு எஸ்எம்எஸ் / வாட்ஸ்அப் மெசேஜையும் அனுப்புவது இல்லை. மேலும் குறிப்பிட்ட மொபைல் எண்ணிற்கு அழைப்பு விடுக்குமாறும் அல்லது ஏதேனும் ஆப்பை டவுன்லோட் செய்யும்மாறும் கேட்கவே கேட்காது என்று ஐசிஐசிஐ வங்கி விளக்கமளித்துள்ளது. இதனுடன் சேர்த்து வாடிக்கையாளர்கள் எப்போதும் பின்பற்ற வேண்டிய 7முக்கியமான பாதுகாப்பு செயல்முறைகளையும் ஐசிஐசிஐ வங்கி பகிர்ந்துள்ளது.

1. எப்போதெல்லாம் உங்கள் ஸ்மார்ட்போனிற்கு லேட்டஸ்ட் ஓஎஸ் அப்டேட் (Latest OS Update) மற்றும் செக்யூரிட்டி அப்டேட் (Security Update) கிடைக்கிறதோ.. அப்போதெல்லாம் அதை உடனே டவுன்லோட் செய்து இன்ஸ்டால் (Download and Install) செய்ய வேண்டும்.
2. கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), ஆப்பிள் ஆப் ஸ்டோர் (Apple App Store) போன்ற அதிகாரப்பூர்வ மற்றும் நம்பகமான தளங்களில் இருந்து மட்டுமே ஆப்களை பதிவிறக்கம் செய்து நிறுவ வேண்டும்.

3. நம்பகமான நிறுவனத்திடம் இருந்து ஆன்ட்டி வைரஸ் அல்லது செக்யூரிட்டி சாஃப்ட்வேரை (Antivirus or Security software) வாங்கி, அதை இன்ஸ்டால் செய்து, தொடர்ந்து அப்டேட்டும் செய்யவும்

4. எந்தவொரு பெர்மிஷனையும் (Permission) அனுமதிக்கும் முன், குறிப்பிட்ட ஆப்பையும் மற்றும் அது கோரும் பெர்மிஷன்களை சரிபார்க்கவும்

5. இமெயில்கள் அல்லது மெசேஜ்களில் (Emails and Messages) உள்ள சந்தேகத்திற்கிடமான லிங்க்குகளை ஒருபோதும் கிளிக் செய்யாதீர்கள்
6. நம்பத்தகாத சோர்ஸ்களில் இருந்து, அறியப்படாத ஆப்கள் மற்றும் ஃபைல்களை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்; இன்ஸ்டால் செய்ய வேண்டாம்.
07. கடைசியாக ஒடிபி, பாஸ்வேர்ட் (Password), பின் (PIN) மற்றும் கார்டு நம்பர் (Card Number) போன்ற உங்களுடைய ரகசிய தகவல்களை யாருடனும் பகிர வேண்டாம்

எல்லாவற்றை விடவும் முக்கியமாக.. எவ்வளவு கவனமாக இருந்தும் கூட, ஏதேனும் ஒரு சைபர் க்ரைம் மோசடியில் நீங்கள் சிக்கிக்கொண்டால்.. உடனடியாக தேசிய சைபர் கிரைம் போர்ட்டலை (National Cyber Crime portal) அணுகி, குறிப்பிட்ட மோசடி தொடர்பான விவரங்களை தெரிவிக்குமாறும் ஐசிஐசிஐ வங்கி தன் கஸ்டமர்களை கேட்டு கொண்டுள்ளது.

Tags

Post a Comment

0 Comments

List Grid

6/lgrid/recent