கணினி விற்பனையில் நெ.1.: இந்திய கணினி சந்தையில், ஏப்ரல் - -ஜூன், 2016, காலகட்டத்தில், 28.8 சதவீத விற்பனை கண்டு முதலிடத்தை எச்.பி., பிடித்திருக்கிறது. இரண்டாமிடத்தை, 24.1 சதவீதத்துடன், 'டெல்' பிடித்திருக்கிறது. மூன்றாமிடத்தில், 17.5 சதவீத விற்பனை கண்ட, 'லெனோவோ' உள்ளது.
'ஸ்மார்ட் போன்' யுகம்!சந்தை ஆய்வு அமைப்பான, 'சைபர் மீடியா ரிசர்ச்' வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இவ்வாண்டு இந்தியாவில் விற்பனையாகும் மொபைல்களின் எண்ணிக்கை, 26.5 கோடியை எட்டும். இதில், 11.6 கோடி, ஸ்மார்ட் போன்களாக இருக்கும்.
இளம் இணையர்கள்அண்மையில், 'மார்கன் ஸ்டான்லி இந்தியா' வெளியிட்டுள்ள ஆய்வின்படி, இந்திய மக்கள் தொகையில், 1980 - -2005 காலகட்டத்தில் பிறந்த, 'புத்தாயிரத் தலைமுறை'யினரின் எண்ணிக்கை, 28 சதவீதம். இந்த இளம் தலைமுறையினர், இணைய வர்த்தகத்தை அதிகரிக்க உதவுவர். 2020 வாக்கில், 32 கோடி பேர் இணையம் மூலம் பொருட்களை வாங்குவர் என அந்த ஆய்வு கணித்துள்ளது.
ரோபோ ஒலிம்பியாட்!உலக ரோபோ ஒலிம்பியாட் போட்டிகள் முதல் முறையாக இந்தியாவில் நடைபெற்றன. புதுடில்லி அருகே, கிரேட்டர் நொய்டாவில் நடந்த இப்போட்டிகளில், 54 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள், பலவித ரோபோக்களை உருவாக்கி போட்டிக்கு வைத்திருந்தனர். வீடுகளுக்குச் சென்று மறுசுழற்சிக்காக குப்பையை சேகரிக்கும் ரோபோவை வடிவமைத்த, இந்திய மாணவர் அணி, வெள்ளிப் பதக்கம் வென்றது!
ஆன்லைனில் மருந்துகள்!இணையம் வழியாக மருந்துகள் விற்பனை செய்யப்படும் முறையை நெறிப்படுத்தும்படி, மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்புக்கு, மருந்து கட்டுப்பாடு கமிட்டி பரிந்துரைத்துள்ளது. நாடு முழுமைக்குமான மருந்து கட்டுப்பாடு இணைய,'போர்ட்டல்' ஒன்றை உருவாக்கி, அதற்கான இணைப்பை எல்லா மருந்து விற்கும் தளங்களிலும் இருக்கும்படி செய்யவேண்டும் என கமிட்டி கூறியுள்ளது. இது, நோயாளிகள் மற்றும் வாடிக்கையாளர்களின்
உண்மைத் தன்மையை சோதிக்க உதவும் என்றும் கமிட்டி கூறியுள்ளது.

0100255075125
Social Plugin
Social Plugin