Type Here to Get Search Results !
Tamil TV Channels | Tamil TV Online | Tamil News Live Tamil TV Channels, Tamil TV, Tamil Channels, Tamil TV Online, Tamil TV Live, Tamil News Live, Watch Tamil TV Live. Watch the most popular Tamil TV Channels

வைபர்(Vibet) செயலியில் புதிய மேம்படுத்தல்!!!

உடனடி செய்தி அனுப்புதல், ஒலி மற்றும் காணொளி தொடர்புகள் ஆகியவற்றை மேற்கொள்ள பலர் பயன்படுத்தும் செயலிகளில் ஒன்று 'வைபர்'. ஒலி வழி தொடர்பு ஐபோன், ஆண்ட்ராய்ட் மற்றும் விண்டோஸ் இயக்கங்களில் செயல்படும் மொபைல் போன்களில் மட்டும் கிடைக்கிறது. இந்த செயலியை, 2011 ஜூன் மாதம் தொடங்கி, சென்ற நவம்பர் வரையில், பதிவு செய்து பயன்படுத்தி வருபவர்களின் எண்ணிக்கை 80 கோடி. மாதந்தோறும் தொடர்ந்து இதனைப் பயன்படுத்தி வருபவர்கள் 23.6 கோடி பேர். உலக அளவில் இயங்கும் மொபைல் சாதனங்களில், 12% சாதனங்களில், உடனடித் தகவல் பரிமாற்றத்திற்காக, வைபர் செயலி பயன்படுத்தப்படுகிறது. 193 நாடுகளில் இந்த செயலி பயன்பாட்டில் உள்ளது. ஆசியா மற்றும் ஆசிய பசிபிக் நாடுகளில், மொத்த பயனாளர்களில் 29.9% உள்ளனர். இந்தியாவில், இணையம் பயன்படுத்துபவர்களில், 21% பேர், வைபர் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர். இது அமெரிக்காவில், 7.2% தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனத்தில், ஏறத்தாழ 14,000 பேர் பணி செய்து வருகின்றனர். இந்த செயலியை, 2014ல், ஜப்பானில் இயங்கும் இணைய வர்த்தக நிறுவனம், ஏறத்தாழ நூறு கோடி டாலர் கொடுத்து வாங்கியது. 
அண்மையில் இந்த செயலி மேம்படுத்தப்பட்டுப் பல புதிய வசதிகள் தரப்பட்டுள்ளன. குறிப்பாக, விண்டோஸ், ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்ட் இயக்க மொபைல் போன் பயனாளர்களுக்கு, அதிகமான அளவில் புதிய வசதிகள் தரப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம். 

ஆண்ட்ராய்ட் போன்களுக்கான வைபர் செயலியின் மேம்படுத்தப்பட்ட பதிப்பு வைபர் 6.2.1.82 ஆகும். இனி, தரப்பட்டுள்ள புதிய வசதிகள். டெக்ஸ்ட் மெசேஜ் அதிக பட்ச அளவு 7,000 கேரக்டர்களாக உயர்த்தப்பட்டுள்ளது. 
ஒலி மற்றும் காணொளி அழைப்புகளின் ஒலி ஹை டெபனிஷன் தரமாக மாற்றப்பட்டுள்ளது. 
போட்டோக்களைப் பகிர்ந்து கொள்ளல், போன் பயன்படுத்தப்படும் இடத்தின் அடிப்படையில் வசதிகள், தொடர்புகள் குறித்த தகவல்கள், ஸ்டிக்கர்கள், உணர்வு படங்கள், லிங்க்ஸ், குரல் வழி செய்தி பரிமாற்றம் மற்றும் விடியோ மெசேஜ் ஆகிய வசதிகள் அறிமுகமாகியுள்ளன. 
Sticker Market லிருந்து அசையும் மற்றும் அசையா படங்களைப் பெற்று பயன்படுத்தலாம்.




அதிக பட்சம் 200 பேர்களைக் கொண்ட குழுக்களை அமைத்துத் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளலாம். இந்த குழுக்களை உருவாக்குபவர்களே நிர்வகிக்கலாம்.
வைபர் செயலிகளில் மட்டும் காணப்படும் Legcat மற்றும் Violet ஆகிய கேரக்டர்களுடன் விளையாடும் வசதி. விளையாட்டில் ஜெயித்து நாணயங்கள் பெறுவது அறிமுகமாகியுள்ளது.

விண்டோஸ் இயக்கத்தில் இயங்கும் வைபர் செயலியின் மேம்படுத்தப்பட்ட பதிப்பு 'வைபர் 6.5.3. விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7, விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 10 ஆகியவற்றில் இது இயங்கும். புதிய பதிப்பு, கீழே தரப்பட்டுள்ள வசதிகளைக் கொண்டுள்ளது. 
மற்ற வைபர் பயனாளர்களுக்கு இலவசமாக செய்திகளை அனுப்பலாம். இலவசமாக அழைத்துப் பேசலாம். அவர்களின் மொபைல் போன் வேறு ஒரு சேவை நிறுவனத்தால் வழங்கப்பட்டாலும் இது சாத்தியமாகும். நீங்கள் பயன்படுத்தும் மொபைல் சாதனங்களை இணைத்து, தொடர்புகள், முன் அழைப்புகள், செய்திகள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ளலாம். பெர்சனல் கம்ப்யூட்டரிலேயே வைபர் வழி தொடர்பினைத் தொடரலாம்.
ஸ்டிக்கர்கள் உங்கள் மொபைல் சாதனங்களுக்கு முன்பு வழங்கப்பட்டன. இப்போது டெஸ்க்டாப்பிலும் அவற்றை வைத்துக் கொள்ளலாம், இதற்கு 'Sync' என்பதில் அழுத்தி 'Send' என்பதில் என்டர் செய்தால் போதும். 
பொது நிறுவனங்களுடனும் தொடர்புகளை மேற்கொள்ள முடியும். குறிப்பாக வர்த்தக நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு நமக்கான சேவைகளைப் பெற இயலும்.

http://download.cdn.viber.com/desktop/windows/ViberSetup.exe

Get Viber

ஐபோன்களுக்கான வைபர்
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களில் இயங்கும் வைபர் செயலியின் அண்மைக் காலத்திய பதிப்பு 6.5.3. அதிகார பூர்வ இணைய தளத்திலிருந்து இதனைத் தரவிறக்கம் செய்திடலாம். தொடர்ந்து மேம்படுத்தப்படுத்தலுக்கான பைல்கள், இந்த இணைய தளத்தில் வெளியிடப்படுகின்றன. இதில் நிறைய விளம்பரங்கள் காட்டப்பட்டு வருகின்றன.

இந்த மேம்படுத்தப்பட்ட பதிப்பில் தரப்பட்டுள்ள புதிய வசதிகள்
புதிய வடிவமைப்பு மற்றும் வண்ணங்கள் இதில் தரப்பட்டுள்ளது, இதன் தனிச்சிறப்பாகும். மற்ற வசதிகள்: தமக்கு வரும் விடியோ அழைப்புகளை, விடியோ அழைப்பிற்கான ஐகானைத் தட்டி பதில் அளிக்க முடியும். இந்த வசதி இயக்கப்பட்டாலும், இயக்கப்படாத நிலையில் இருந்தாலும் இவ்வாறு இயக்கிப் பதில் அளிக்க முடியும். விடியோ அழைப்பு ஒன்று இயக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும், விடியோவினை மட்டும் காட்டப்படாமல் அமைக்க இயலும். அடுத்த முனையில் இருப்பவர், உங்களை அதன் பின் பார்க்க இயலாது. ஆனால், நீங்கள் பேசுவதைக் கேட்க முடியும்.
அழைப்பவர் அழைப்புகளை மினிமைஸ் செய்து வைக்க முடியும். இதனை சேட் திரை, தொடர்புகளுக்கான பட்டியல் உள்ள திரை மற்றும் விடியோ திரையிலிருந்தவாறே மேற்கொள்ள முடியும். இத்துடன், விடியோ செய்திகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள இயலும்.
உங்கள் மொபைல் போனில் ஏற்கனவே வைபர் செயலி பதிக்கப்பட்டு இயக்கப்பட்டுக் கொண்டிருந்தால் தான் வைபர் செயலியின் மேம்படுத்தப்படும் பைல்களைத் தானாகப் பெறும் வகையில் அமைக்க முடியும். இல்லை எனில், ஆப்பிள் ஸ்டோர், பிளே ஸ்டோர் மற்றும் மைக்ரோசாப்ட் ஸ்டோர்களிலிருந்து நாமாகத் தரவிறக்கம் செய்து மேம்படுத்திக் கொள்ளலாம்.
உடனடி செய்திகள் பரிமாற்றத்திற்கு உதவிடும் செயலிகள் சந்தையில், தற்போது பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. ஸ்மார்ட் போன்களின் விற்பனை அதிகரித்து வருவதனால், இத்தகைய செயலிகளைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் கணிசமாகத் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 
இங்கு ஒரு கூடுதல் தகவலாக, பரவலாகப் பயன்படுத்தப்படும் இத்தகைய செயலிகள் குறித்தும், அவற்றின் பயனாளர் எண்ணிக்கை குறித்தும் தகவல்கள் தரப்பட்டுள்ளன.

தொடர்ந்து ஒரு மாதத்தில் பிளாக் பெரி மெசஞ்சர் பயன்படுத்துபவர்கள் 10 கோடி பேர். பேஸ்புக் மெசஞ்சர் பயன்படுத்துபவர்கள் நூறு கோடி பேர். ஐமெசேஜ் 25 கோடி. ககாவோ (Kakao) 16 கோடி. கிக் (Kik) பயன்படுத்துபவர்கள் 30 கோடி. லைன் (LINE) 21.8 கோடி பேர். ஸ்கைப் 30 கோடி. ஸ்நாப் சாட் 10 கோடி. வி சேட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 76.2 கோடி. வாட்ஸ் அப் 100 கோடி. 

List Grid

6/lgrid/recent