Type Here to Get Search Results !
Tamil TV Channels | Tamil TV Online | Tamil News Live Tamil TV Channels, Tamil TV, Tamil Channels, Tamil TV Online, Tamil TV Live, Tamil News Live, Watch Tamil TV Live. Watch the most popular Tamil TV Channels

லேப்டாப்பிலும் கம்ப்யூட்டரிலும்: Jio TV

(Only For Indian Users)

ஜியோ பயனர்களுக்குக் கிடைக்கும் பல நன்மைகளுடன் அனைவருக்கும் கிடைக்கக்கூடிய ஒரு பொதுவான பொழுதுபோக்கு நன்மை என்றால் அது ஜியோ டிவி நன்மை தான். ஜியோ கொடுக்கும் மலிவான அதிகளவு டேட்டாவை இப்படியும் பலர் தீர்த்து வருகின்றனர். ஜியோ டிவி தளத்தில் ஏராளமான திரைப்படங்களும், பொழுதுபோக்கு அம்சமும் நிறைந்திருக்கிறது. இதை பெரிய திரையில் பயன்படுத்த கீழே குறிப்பிட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றுங்கள்.

லேப்டாப்பிலும் கம்ப்யூட்டரிலும் Jio Tv

லேப்டாப்பிலும் கம்ப்யூட்டரிலும் Jio Tv

Jio Tv பயன்பாட்டை உங்களின் லேப்டாப் அல்லது கம்ப்யூட்டர்களில் பயன்படுத்த நீங்கள் முதலில் ஒரு ஆண்ட்ராய்டு தளத்தை உங்கள் கணினியில் உருவாக்க வேண்டும். இதைப் படித்தவுடன் போச்சுடா, பெரிய தலைவலி புடுச்ச வேலையா இருக்கும் போலயே? என்று நினைக்காதீர்கள். உங்கள் லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் ஆண்ட்ராய்டு தளத்தை உருவாக்குவது என்பது நீங்கள் மெசேஜ் செய்வதை விட மிகவும் எளிமையானது.

ஆண்ட்ராய்டு எமுலேட்டர் (Android Emulator)

ஆண்ட்ராய்டு எமுலேட்டர் (Android Emulator)

நீங்கள் கடினமான வேலை என்று நினைக்கும் வேலையை Android Emulator என்ற ஆப் மிகவும் எளிமையாக முடித்துவிடும். Bluestacks மற்றும் Nox App Player ஆகிய இரண்டு ஆப்களும் உங்கள் லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் எளிதாக ஆண்ட்ராய்டு தளத்தை உருவாக்க உதவும். இந்த ஆப்ஸ்களை பதிவிறக்கம் செய்து, உங்கள் ஸ்மார்ட்போனில் எப்படி ஆப்ஸ்களை பயன்படுத்துவீர்களோ, அப்படி நீங்கள் பயன்படுத்தலாம்.

லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் Jio Tv-ஐ எப்படி இன்ஸ்டால் செய்வது?

லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் Jio Tv-ஐ எப்படி இன்ஸ்டால் செய்வது?

  • முதலில் மேலே குறிப்பிட்டுள்ள ஆண்ட்ராய்டு எமுலேட்டர் ஆப்ஸ்களில் ஏதேனும் ஒன்றை உங்கள் லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் பதிவிறக்கம் செய்யுங்கள்.
  • அதை சரியாக இன்ஸ்டால் செய்து, ஓபன் செய்யுங்கள்.
  • முக்கிய குறிப்பு உங்கள் சாதனத்தின் OS-க்கு ஏற்றார் போல் உள்ள வெர்ஷனை இன்ஸ்டால் செய்யுங்கள்.
APK ஃபைலை சர்ச் செய்யுங்கள்
  • இப்போது உங்கள் ஜிமெயில் அக்கௌன்ட் விபரத்தை உள்ளிட்டு கூகிள் பிளே ஸ்டோரை ஓபன் செய்யுங்கள்.
  • இப்போது, கூகிள் பிளே ஸ்டோரில் இருந்து Jio Tv ஆப்ஸின் APK ஃபைலை சர்ச் செய்யுங்கள்.
  • திரையில் காண்பிக்கப்படும் Jio Tv ஆப்ஸை கிளிக் செய்து Accept கிளிக் செய்து இன்ஸ்டால் செய்யுங்கள்.
இப்போது, Android Emulator வழியாக Jio Tv ஆப்ஸை ஓபன் செய்யுங்கள்.         
Jio Tv
  • இப்போது, உங்களின் ஜியோ ஐடி மற்றும் பாஸ்வோடு விபரங்களை உள்ளிடுங்கள்.
  • உங்கள் ஸ்மார்ட்போனில் பார்ப்பது போன்ற Jio Tv ஆப்ஸை திரையில் காண்பீர்கள்.
  • இப்போது, Wide என்ற விருப்பத்தை கிளிக் செய்து முழு திரைக்கு Jio Tv-ஐ பார்த்து மகிழுங்கள்.
                                                                                       
Source: Gizbot
Tags

Post a Comment

0 Comments

List Grid

6/lgrid/recent