Type Here to Get Search Results !
Tamil TV Channels | Tamil TV Online | Tamil News Live Tamil TV Channels, Tamil TV, Tamil Channels, Tamil TV Online, Tamil TV Live, Tamil News Live, Watch Tamil TV Live. Watch the most popular Tamil TV Channels

மனித கம்ப்யூட்டர்” என்று அழைக்கப்பட்ட சிங்கப்பெண்…..இயற்கை எய்தினார்

NASA நிறுவனம் பல நம்ப முடியாத சாதனைகளை புரிந்து மனித குலத்திற்கு பெருமை சேர்த்துள்ளது என கூறினால் அது மிகையாகாது. அவர்களின் ஒவ்வொரு மிஷனுக்கு பின்னும்  அந்த அந்த ராக்கெட்டுகளின் நோக்கத்தை நிறைவேற்ற பல நூறு கணக்குகள் போடப்பட்டு பின்னர் தான் செலுத்தப்படுகிறது.
கணிதத்தில் வல்லவராக திகழ்ந்தவரும் விண்ணிற்கு முதல் அமெரிக்கரை அனுப்பியவருமான கேத்தரின் ஜான்சனை இன்று நாம் இழந்து விட்டோம். ஹியூமன் கம்ப்யூட்டர் (Human Computer) என்று அனைவராலும் அழைக்கப்படும் கேத்தரின் ஜான்சன் தனது 101 வது வயதில் Feb. 24, 2020 இயற்கை எய்தியுள்ளார்.

வெஸ்ட் வெர்ஜினியாவின் வைட் சல்பர் ஸ்பிரிங்கில் ஆகஸ்ட் 26 ஆம் தேதி, 1918 ஆம் ஆண்டு பிறந்தார். 1937 ல் தனது பதினெட்டாம் வயதில் வெஸ்ட் வெர்ஜினியா ஸ்டேட் காலேஜில் பட்டம் பெற்றவர். 1953 ல் Langley Research Centre’s Guidance and Navigation Department of NASA’s predecessor, the National Advisory Committee for Aeronautics ல் ஒரு கம்ப்யூட்டராக பணிபுரிய சேர்ந்தார்.
விண்ணுக்கு செல்லும் ஏவுகணைகளின் பயணப்பாதையை கணிப்பதே இவரது வேலை. இவ்வாறு 1961 ல் முதல் முறையாக விண்ணுக்கு சென்ற ஆலன் ஷெப்பர்ட்டின் பயணப் பாதையை கணித்தது இவர் தான். அது மட்டுமல்ல நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்டிரின் ஆகியோர் நிலாவிற்கு செல்ல பயணப் பாதையும் கணித்துக் கொடுத்தார்.
அதன் பிறகு கம்ப்யூட்டர்கள் பிரபலமாகி வந்த நிலையில் NASA அவற்றை நம்ப ஆரம்பித்தது. ஜான்சனும் கம்ப்யூட்டரில் வேலை செய்ய ஆரம்பித்தார். முதலில் விண்ணுக்கு சென்ற அமெரிக்கரான ஜான் கிலென் கம்ப்யூட்டர்களை நம்பாமல் ஜான்சன் போட்ட கணக்குகளையே நம்பினார் என்பதை இங்கு பதிவு செய்தே ஆக வேண்டும்.
குழப்பமான சூழ்நிலையில் சில முறைகள் NASA இருந்ந போதும் கூட அந்த வேலையை தான் முடித்து தருவதாக மன தைரியத்துடன் கூறியவர் கேத்தரின் ஜான்சன். NASA விற்கு அவர் அளித்து வந்த பங்களிப்புகள் பாரக் ஒபாமா 2015 ல் “The Presidential Medal of Freedom” என்ற விருதை வழங்கிய வரைக்கும் தெரியவில்லை. இதன் பிறகு இவரைப் பற்றி உருவான ஒரு திரைப்படம் ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இவர் உடல் அளவில் மண்ணை விட்டு சென்றாலும் இவர் ஆற்றிய பணிகள் விண்ணிலும் மண்ணிலும் என்றுமே சரித்திரத்தில் இடம் பெறும்.

List Grid

6/lgrid/recent