Type Here to Get Search Results !
Tamil TV Channels | Tamil TV Online | Tamil News Live Tamil TV Channels, Tamil TV, Tamil Channels, Tamil TV Online, Tamil TV Live, Tamil News Live, Watch Tamil TV Live. Watch the most popular Tamil TV Channels

WiFi பாஸ்வோர்ட் மறந்து போச்சா? எப்படி பாஸ்வோர்டை கண்டுபிடிப்பது Android மற்றும் iOS டிவைஸில்? .. Tips

 பாஸ்வோர்ட் (Password) என்றாலே அதை எப்போதும் மற்றவர்களுடன் பகிரக் கூடாது, குறிப்பாக பாஸ்வோர்ட்டை யாருக்கும் தெரியாமல் மிகவும் ஸ்ட்ராங் ஆக செட் செய்த நாமே அதை மறக்கவே கூடாது. ஆனால், நடைமுறையில் அப்படி நடக்காது. எப்படியானாலும் நாம் செட் செய்த பாஸ்வோர்டை சரியான நேரத்தில் மறந்துவிடுவோம். பெரும்பாலும், நம்முடைய வைஃபை (WiFi) பாஸ்வோர்ட்டை நாம் ஒருமுறை செட் செய்வதோடு அடுத்து அதை அதிகம் பயன்படுத்தமாட்டோம்.

சரியான நேரத்தில் உங்களுடைய WiFi பாஸ்வோர்ட் மறந்து போச்சா?

சரியான நேரத்தில் உங்களுடைய WiFi பாஸ்வோர்ட் மறந்து போச்சா?

இதனால், கட்டாயம் நம்முடைய வைஃபை பாஸ்வோர்டை நம்மில் பெரும்பாலானோர் மறந்திருக்க வாய்ப்புள்ளது. வீட்டிற்கு விருந்தாளிகள் அல்லது நண்பர்கள் வரும் நேரத்தில் கட்டாயம் அவர்களுடைய சாதனத்தை உங்கள் வைஃபை உடன் இணைக்க விரும்புவார்கள். இந்த நேரத்தில், உங்களுடைய பாஸ்வோர்டை கேட்கும் போது, அது உங்கள் நினைவில் இருக்காது. இப்படியான சூழ்நிலையைச் சாமர்த்தியமாகக் கையாள ஒரு எளிய வழி உள்ளது. அதைத் தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

உங்கள் வைஃபை பாஸ்வோர்டை மறந்துவிட்டீர்கள் என்றால் என்ன செய்வது?

உங்கள் வைஃபை பாஸ்வோர்டை மறந்துவிட்டீர்கள் என்றால் என்ன செய்வது?

இப்படியான அசவுகரியத்தை ஒருவேளை நீங்களும் சந்தித்தால், இனி இந்த டிரிக்கை யூஸ் செய்து உங்கள் வைஃபை பாஸ்வோர்டை நொடியில் தெரிந்துகொள்ளலாம். ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்கள் இருவருக்கும் யூஸ் ஆகும் டிப்ஸை இங்கு உங்களுக்காக வழங்கியுள்ளோம். உங்கள் வைஃபை பாஸ்வோர்டை ஒருவேளை நீங்கள் மறந்துவிட்டீர்கள் என்றால், இனி உடனே இந்த டிரிக்கை பயன்படுத்துங்கள்.

ஆண்ட்ராய்டு போன்களில் வைஃபை பாஸ்வேர்டை தெரிந்துகொள்வது எப்படி?

ஆண்ட்ராய்டு போன்களில் வைஃபை பாஸ்வேர்டை தெரிந்துகொள்வது எப்படி?

  • உங்கள் Android போனின் Settings ஓபன் செய்து WiFi & Network என்பதை கிளிக் செய்யுங்கள்.
  • நீங்கள் இணைக்கப்பட்டுள்ள வைஃபை அல்லது சேவ் செய்யப்பட்ட நெட்வொர்க்கின் லாக் ஐகானை கிளிக் செய்க.
  • அல்லது இணைக்கப்பட்ட வைஃபை நெட்வொர்க்கிற்கு அருகில் இருக்கும் 'i' ஐகானைக் கிளிக் செய்யவும்.
  • Share password என்பதை கிளிக் செய்யுங்கள்.
  • QR ஸ்கேன் அல்லது பாஸ்வோர்ட் மூலம் WiFi உடன் இணைப்பது எப்படி?

    QR ஸ்கேன் அல்லது பாஸ்வோர்ட் மூலம் WiFi உடன் இணைப்பது எப்படி?

    • உங்கள் ஸ்மார்ட்போனின் PIN நம்பர் அல்லது பிங்கர் பிரிண்டை உள்ளிட்ட வேண்டும்.
    • இப்போது ஒரு புதிய டேப் இல் QR குறியீடு உடன் WiFi பாஸ்வோர்ட் காண்பிக்கப்படும்.
    • QR குறியீட்டை ஸ்கேன் செய்தோ அல்லது பாஸ்வோர்டை உள்ளிட்டோ WiFi உடன் இணைந்துகொள்ளலாம்.
    • Android 10 அல்லது அதற்கு மேல் இருக்கும் சாதனங்களின் இந்த டிரிக் செயல்படும்.
    • ஐபோன் போன்களில் வைஃபை பாஸ்வேர்டை தெரிந்துகொள்வது எப்படி?

      ஐபோன் போன்களில் வைஃபை பாஸ்வேர்டை தெரிந்துகொள்வது எப்படி?

      iPhone இல் வைஃபை பாஸ்வோர்டை கண்டறிவது என்பது கொஞ்சம் கடினமான காரியமாக இருக்கிறது. ஆப்பிளின் கடுமையான தனியுரிமை மற்றும் பாதுகாப்புக் கொள்கைகள் தான் இதற்கு முக்கிய காரணமாகத் திகழ்கிறது. உங்கள் ஐபோனில் சேவ் செய்யப்பட்ட நெட்வொர்க்குகளின் வைஃபை பாஸ்வோர்டை தெரிந்துகொள்வது கடினம் தான் என்றாலும் கூட, ஒரு டிரிக் நம்மிடம் உள்ளது. இதற்கு ஒரு macOS PC தேவைப்படும்.


    ஐபோன் பயனர்கள் இதை செய்யுங்கள்

    ஐபோன் பயனர்கள் இதை செய்யுங்கள்

    • உங்கள் ஐபோனில் Settings செல்லவும்.
    • iCloud ஐத் திறக்கவும்.
    • Keychain என்ற விருப்பத்தைக் கண்டுபிடித்து கிளிக் செய்யவும்.
    • மீண்டும் Settings சென்று உங்கள் Personal Hotspot ஐ இயக்கவும்.
    • இப்போது உங்கள் மேக்கை உங்கள் பர்சனல் ஹாட்ஸ்பாட் நெட்வொர்க் உடன் இணைக்கவும்.
    • Spotlight சர்ச் ஐ ஓபன் செய்து (CMD+Space) Keychain ஆக்ஸஸ் கிளிக் செய்து Enter ஐ தட்டவும்.
    • இனி ஈசியாக மறந்த பாஸ்வோர்டை கண்டுபிடிக்கலாம்

      இனி ஈசியாக மறந்த பாஸ்வோர்டை கண்டுபிடிக்கலாம்

      • இப்போது நீங்கள் பாஸ்வோர்டை கண்டுபிடிக்க விரும்பும் வைஃபை நெட்வொர்க்கைத் தேடலாம்.
      • ஒரு பாப்-அப் மெனு திறக்கும், இதில் நெட்வொர்க் விவரங்கள் அனைத்தும் காட்டப்படும்.
      • Show Password என்பதை கிளிக் செய்யவும்.
      • உங்கள் administrator user credentials விபரங்களை உள்ளிடவும்.
      • இப்போது உங்களுக்கான WiFi பாஸ்வோர்ட் காண்பிக்கப்படும்....._

Post a Comment

0 Comments

List Grid

6/lgrid/recent