Tamil Pc Info Notice:

அன்புள்ள வாசகர்களே !
எமது வலைப்பூ தற்சமயம் மேம்படுத்தல் பணிகள் நடைபெறுவதால், இடையூறுகள் மற்றும் தடங்கள் ஏற்பட்டும் என்பதனை சற்று வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். விரைவில் எமது வலைப்பூ புதிய மேம்படுத்தலுடன் பிரசுரம் ஆகும்.

நன்றி,

Entertainment

.

Latest Post

உங்களின் ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் மொபைல்போனில் தமிழில் டைப் செய்வது எப்படி.?!!!

வாட்ஸ்ஆப்பில் அழகிய தமிழில் தகவல்கள் பரிமாறக்கொள்ள விரும்புகிறீர்களா.?? அல்லது முகநூல் பக்கத்தில் உங்களின் புரட்சிமிக்க கருத்துக்களை தமிழில் போஸ்ட் செய்ய விரும்புகிறீர்களா.?? அல்லது உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன், டேப்ளெட் அல்லது பிசியில் தமிழ் மொழி பயன்படுத்தி ஒரு மின்னஞ்சலை உருவாக்க வேண்டுமா.? ஆம் என்றால் - நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கின்றீர்கள்.
ஸ்மார்ட்போன் பயன்பாடுகளின் உதவியுடன் நாம் நமது ஸ்மார்ட்போன்களில் பல அம்சங்களை அனுபவிக்க முடியும். அந்த வகையில் உங்களின் ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் மொபைல்போனில் இங்கு தொகுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றுவதின் மூலம் நீங்கள் உங்களின் வாட்ஸ்ஆப்பில், பேஸ்புக்கில் தமிழில் டைப் செய்ய முடியும்.
வழிமுறை #01

வழிமுறை #01

உங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்தின் மூலம் கூகுள் இண்டிக் கீபோர்ட் என்ற (Google Indic Keyboard) பயன்பாட்டை பதிவிறக்கம் செய்து, நிறுவவும்.
வழிமுறை #02
ஒருமுறை உங்கள் சாதனத்தில் இந்த ஆப் நிறுவப்பட்டதும். அந்த பயன்பாட்டினை உங்கள் ஸ்மார்ட்போன் ஆப் டிராயரில் இருந்து திறக்கவும்.

வழிமுறை #03

இப்போது பயன்பாட்டின் பிரதான திரையில் "எனேபிள் இன் செட்டிங்ஸ்" (Enable in settings) என்ற பொத்தானைத் தட்டவும்.

வழிமுறை #04

இப்போது "கூகுள் எனேபிள் கீபோர்ட்" என்ற ஆப்ஷனை அதன் அருகில் இருக்கும் பெட்டியைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் இயக்கம் பெற செய்ய முடியும் (சில ஆண்ட்ராய்டு தொலைபேசிகளில், செக் பாக்ஸிற்கு பதிலாக ஆஃப் / ஆஃப் பொத்தானை மாற்றாக இருக்கும்)

வழிமுறை #05

பின்னர், அடுத்த திரையில் "செலெக்ட் இன்புட் மெத்தேட்" என்ற பொத்தானைத் தட்டவும். பின்னர் "இங்கிலிஷ் மற்றும் இந்தியன் லேங்குவேஜ்ஸ்" விசைப்பலகை என்பதைத் தேர்வு செய்யவும்.

வழிமுறை #06

அடுத்த கட்டத்தில், கூகுள் அநாமதேய பயன்பாட்டு புள்ளிவிவரங்களை அனுப்ப ஒப்புக்கொள்கிறீர்கள் என்றால் டிக் செய்யவும் அல்லது அதை புறக்கணித்து விட்டு இடது புறம் தேய்க்க "அக்செப்ட்" தேர்வுப்பெட்டியை காண்பீர்கள் அதை தேர்ந்தெடுக்கவும்.

வழிமுறை #07

இப்போது, அடிஷனல் லேங்குவேஜ்ஸ் (கூடுதல் மொழிகள்) விருப்பத்தைத் தட்டவும். பின்னார் "தமிழ் & ஆங்கிலம்" என்ற உள்ளீட்டு முறை பொத்தானை இயக்கவும்.

வழிமுறை #08

இப்போது வாட்ஸ்ஆப்பை திறந்து, நீங்கள் தமிழ் டைப் செய்ய விரும்பும் மெசேஜ் பாக்ஸை தட்டவும். இப்போது திரையில் கூகுள் இன்க் விசைப்பலகை பாப்-அப் ஆவதை காண்பீர்கள்.

வழிமுறை #09

இப்போது நீங்கள் கீபோர்டின் மேல் பக்கம் "இந்திய மொழிகளின்" பொத்தானை பார்ப்பீர்கள், அதை தட்டவும், இப்போது பாப் அப் விண்டோவில் "தமிழ்" மொழியை தேர்ந்தெடுக்கவும்.

வழிமுறை #10

இறுதியாக, தமிழில் தட்டச்சு செய்ய ஒலிபெயர்ப்பு அல்லது நேட்டிவ் விசைப்பலகை (transliteration or Native keyboard mode) முறையை தேர்வு செய்ய உங்களால் தமிழில் டைப் செய்ய முடியும். (உடன் நீங்கள் பின்னர் எப்போது வேண்டுமானாலும் விசைப்பலகை அமைப்பை மாற்றலாம்.
இதே போன்று வைபர் ஆப்ஸ்க்கும் பயன்படுத்தலாம்.

மேக்புக் கணனி ஊடாக வைஃபை(Wifi) இண்டர்நெட்டை ஸ்மார்ட்போனுக்கு மாற்றும் எளிய வழிகள்

ஒருசில சமய சந்தர்ப்பங்களில் உங்கள் மேக்புக் இண்டர்நெட்டை ஸ்மார்ட்போனில் இருந்து லேப்டாப்புக்கு மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் மிக எளிதாக ஒருசில வழிமுறைகள் மூலம் செய்துவிடலாம்.
வைஃபை வழியாக மேக்புக் இண்டர்நெட்டை ஸ்மார்ட்போனுக்கு மாற்றும் எளிய வழிக

முதலில் வயர்லெஸ் ரூட்டரை உங்களுடைய லேப்டப்பில் இணைக்க வேண்டும். பின்னர் உங்கள் லேப்டாப்பில் உள்ள அடாப்டர் இருந்தால் அதன் வழியாகவும் இல்லையென்றால் ஒரு ஹாட்ஸ்பாட்டை உருவாக்கி அதன் மூலம் இண்டர்நெட்டை மாற்றி கொள்ளலாம்.
இந்த மாற்றத்திற்கு ஒரு எதெர்நெட் கேபிள் உங்களுக்கு தேவைப்படும். இண்டர்நெட்டை ஸ்மார்ட்போனில் இருந்து லேப்டாப்பிற்கு மாற்ற வேண்டும் என்பதை ஒவ்வொரு படியாக பார்ப்போம்.
முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

முதல் ஸ்டெப்:

முதலில் System preferences என்ற பகுதியில் உள்ள ஆப்பிள் மெனுவில் Sharing என்பதை க்ளிக் செய்ய வேண்டும். அதில் உங்கள் மவுசை அருகில் கொண்டு சென்றாலே Internet Sharing என்ற ஆப்சன் வரும். அதை க்ளிக் செய்ய வேண்டும்.

இரண்டாவது ஸ்டெப்

Internet Sharing ஆப்சனை க்ளிக் செய்தவுடன் அதில் Share your connection from" என்ற இன்னொரு ஆப்சன் வரும். அதில் இருக்கும் டிராப்டவுனை க்ளிக் செய்து Ethernet என்பதை க்ளிக் செய்ய வேண்டும். பின்னர் அதில் உள்ள நான்கு ஆப்சன்களில் வைஃபை என்பதை க்ளிக் செய்ய வேண்டும்

மூன்றாவது ஸ்டெப்

இந்த ஸ்டெப்புக்கு செல்லும் முன்னர் உங்கள் லேப்டாப்பில் வைஃபை இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இதற்கு ஒரு வயர்லெஸ் ஹாட்ஸ்பாட்டை உருவாக்கினால் போதுமானது.
வைஃபை இருப்பதை உறுதி செய்த பின்னர் வைஃபை ஆப்சனை க்ளிக் செய்தால் ஒரு புதிய விண்ட்டொ வரும். அதில் உள்ள வயர்லெஸ் நெட்வொர்க் என்ற ஆப்சனில் நெட்வொர்க்கின் பெயரையும் பாஸ்வேர்டையும் பதிவு செய்ய வேண்டும். ஒருவேளை நீங்கள் முக்கிய டேட்டாகளை பயன்படுத்த போவதில்லை என்றால் பாஸ்வேர்ட் தேவையில்லை

நான்காவது ஸ்டெப்

இந்த ஸ்டெப்பில் உங்களுக்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகி, இண்டர்நெட்டை பகிர சம்மதமா? என்று கேட்கும். அதில் இருக்கும் இரண்டு ஆப்சன்களான ஸ்டார்ட் மற்றும் கேன்சல் ஆகியவற்றில் ஸ்டார்ட்டை க்ளிக் செய்ய வேண்டும்

ஐந்தாவது ஸ்டெப்

இந்த ஸ்டெப்பில் நீங்கள் செய்ய வேண்டியது இண்டர்நெட்டை enable செய்ய வேண்டியது ஒன்று மட்டுமே. தற்போது இண்டர்நெட் லேப்டாப்பில் இருந்து வைபை மூலம் ஸ்மார்ட்போனில் கனெக்ட் செய்யப்பட்டிருக்கும். லேப்டாப்பில் நீங்கள் பாஸ்வேர்டை பதிவு செய்திருந்தால் அதே பாஸ்வேர்டை ஸ்மார்ட்போனிலும் பதிவு செய்து தேவையான இண்டர்நெட்டை நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம்

பயனாளர்கள் இனி 50 எம்பி அளவினுக்கு பைல்களை அனுப்பவும்-பெறவும் இயலுமென அறிவித்துள்ளது ஜிமெயில்!!!

இணைய உலகின் அதிகப்படியான தகவல்களைக் கொண்டதும்,அதிகம் பயன்படுத்தப்படுவதுமான கூகுள் உலவியின் பல சேவைகளைப்போல அதன் மற்றுமோர் தளம் தான் ஜிமெயில்.பெரும்பான்மையாக அலுவலக மற்றும் இதர பயன்படுகளுக்காக இதுவே பயன்படுத்தப்படுகிறது.மேலும் உலகு முழுவதும் இதன் பயனாளர்கள் எண்ணிக்கை அதிகமானதும் கூட.
அத்தகைய,ஜிமெயில் வழியாக இனி 50 எம்பி அளவுள்ள பைல்களை அனுப்பவும் பெறவும் இயலுமென அறிவித்துள்ளது கூகுள்.அதுகுறித்த விரிவான தகவல்கள் கீழே.
இனி 50 எம்பி-ஜிமெயில்-அசத்தல் அப்டேட்.!

ஜிமெயில்:

கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் சேவையானது ஏப்ரல் 1 2004 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் இந்த சேவையினை பெற்றுக்கொள்ள ஏற்கனவே ஜிமெயில் பயன்படுத்துபவரின் அழைப்பு தேவை.இது அறிமுகப்படுத்தப்பட்ட போது போட்டியாளர்கள் தமது வாடிக்கையாளர்களை தக்கவைக்க சேமிப்பு அளவினை கூட்டினர்.மேலும் பாரிய மாற்றங்களைச் செய்தனர்.ஆனாலும் ஜிமெயில் வளர்ச்சி தொடர்ந்துகொண்டே இருக்கிறது.இதனைப்பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டே நூறு கோடியைத் தாண்டிவிட்டது.
இனி 50 எம்பி-ஜிமெயில்-அசத்தல் அப்டேட்.!

25 எம்பி:

ஜிமெயில் மூலம் அதன் பயனாளர்கள் 25 எம்பி அளவுள்ள பைல்களை மட்டுமே ஜிமெயில் மூலமாக அனுப்பவும் பெறவும் இயலும்.அதற்கு அதிகமான அளவுள்ள பைல்களை கூகுள் டிரைவ் மூலமாக அப்லோட் செய்து அதன் லிங்கினை மட்டுமே ஜிமெயில் வழியாக அனுப்பிட இயலும். அதனைப்பெறுபவரும்,அந்த லிங்க்கின் வழியாகவே டவுன்லோட் செய்துகொள்ள இயலும்.
இனி 50 எம்பி-ஜிமெயில்-அசத்தல் அப்டேட்.!

அதிகரிக்கப்பட்ட அளவு:

ஆனால்,தற்போது அந்த அளவினுக்கான வரையறையினை அதிகரித்துள்ளது.அது என்னவெனில் தற்போது ஜிமெயில் பயனாளர்கள் 50எம்பி வரை அளவுள்ள பைல்களை ஜிமெயில் வழியாக அனுப்ப இயலும்.
அதற்கு,
ஜிமெயிலினை ஓப்பன் செய்துகொண்டு>கம்போஸ் மெயில்>க்ளிக் கூகுள் டிரைவ்>நீங்கள் அனுப்ப வேண்டிய ஃபைலை தேர்ந்தெடுத்துக்கொண்டு>எந்த வடிவில் குறிப்பிட்ட ஃபைலை அனுப்பிட வேண்டுமோ அதனை தேர்ந்தெடுத்தக்கொள்ள வேண்டும் அதாவது டாகுமெண்ட்ஸ்,ஷீட்ஸ்,ஸ்லைடு போன்ற ஏதேனும் ஒன்றினை தேர்ந்தெடுத்துக்கொண்டு அதன் பிறகு ஜிமெயில் அனுப்பலாம்.
நன்றி: தமிழ்கிஸ்பாட்.

நோக்கியா 3310 கருவியிடம் "பல்பு" வாங்கிய கேலக்ஸி எஸ்7ன் வித்தியாசங்கள்!!!

உலக ஸ்மார்ட்போன் சந்தையை ஆளுவதாக மார்தட்டிக்கொள்ளும் இதர நிறுவனங்களின் அதிநவீன, சிறப்பம்சங்கள் கொண்ட ஹை-எண்ட் ஸ்மார்ட்போன்களை தோற்கடிக்க நோக்கியா நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் அல்ல, நோக்கியா பிராண்ட் பீச்சர் கருவியான நோக்கியா 3310 கருவியே போதுமானது என்பதற்கு இதோ ஒரு வெளிப்படையான ஆதாரம்.!
போனரெனா சமீபத்தில் நிகழ்த்திய ஒரு ஒப்பீட்டில் புதிதாக வெளியான நோக்கியா 3310 கருவியின் 2எம்பி கேமராவிற்கும் மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்7 கருவியின் 12எம்பி கேமராவிற்கும் இடையே ஒரு போட்டியை நிகழ்த்தியது. அதன் முடிவுகள் கற்பனைக்கு எட்டாத ஒன்றாய் இருந்தன. ஒருவேளை நீங்கள் ஒரு எஸ்7 கருவியின் உரிமையாளர் என்றால் மேற்கொண்டு படித்து உங்கள் மனதை காயபப்டுத்திக்கொள்ள வேண்டாம்.!

நேரடி போட்டி

நேரடி போட்டி

இந்த நேரடி போட்டியில் மிகவும் வியக்கத்தக்க வண்ணம் நோக்கியா 3310 வெற்றி கண்டுள்ளது. வாயால் சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள் என்று எனக்கு தெரியும், இதோ புகைப்பட ஒப்பீடு ஆதாரம் நீங்களே பாருங்கள்.!

நோக்கியா 3310

இது நோக்கியா 3310 கருவியின் 2 எம்பி கேமராவின் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படம்.!

கேலக்ஸி எஸ்7

இது அதே இடத்தில், அதே ஒளியியலில் கேலக்ஸி எஸ்7 கருவியின் 12 எம்பி கேமராவின் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படம்.!

நோக்கியா 3310

இது நோக்கியா 3310 கருவியின் மூலம் எடுக்கப்பட்ட ஒரு அவுட் டோர் புகைப்படம்.!

கேலக்ஸி எஸ்7

இது அதே அவுட் டோரில் அதே ஒளியியலில் கேலக்ஸி எஸ்7 கருவியின் 12 எம்பி கேமராவின் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படம்.!
நோக்கியா 3310
 

நோக்கியா 3310

இது நோக்கியா 3310 கருவியின் 2 எம்பி கேமராவின் மூலம் எடுக்கப்பட்ட ஒரு உணவு பண்டத்தின் புகைப்படம்.!

கேலக்ஸி எஸ்7

இது அதே ஒளியியலில் அதே உணவு பண்டத்தை கேலக்ஸி எஸ்7 கருவியின் 12 எம்பி கேமராவின் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படம்.!

இதர சிறப்பம்சங்கள்

நோக்கியா 3310 கருவியின் இதர சிறப்பம்சங்கள் என்று பார்க்கையில் டிஸ்ப்ளே தொழில்நுட்பம் என்று வரும்போது புதிய நோக்கியா 3310 ஆனது கிளாசிக் 3310 கருவியை விட பல மெயில் தூரம் அதிக பாய்ச்சலை வழங்குகிறது. அதாவது வண்ணத்திரை கொண்டுள்ளது. வழக்கற்றுபோன ஒற்றை நிற காட்சிகள் காலம் மாறி வண்ண திரை கொண்டு நோக்கியா 3310 வெளியாகும் என்பது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்.

120 பிபிஐ பிக்சல் அடர்த்தி

இந்த புதிய நோக்கியா 3310 ஆனது 120 பிபிஐ பிக்சல் அடர்த்தி கொண்ட ஒரு 2.4 அங்குல டிஸ்ப்ளே கொண்டு வருகிறது. இதன் மூலம் 3310 டிஸ்ப்ளே ஆனது பெரிய புரட்சி என்றில்லாமல் ஒரு போதுமான அளவு கொண்ட டிஸ்ப்ளேவாக இருக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

கர்வுடு ஸ்க்ரீன் விண்டோ

அதுமட்டுமின்றி நோக்கியா பிராண்ட் கருவிகளை தயாரிக்கும் உரிமைகளை பெற்றுள்ள எச்எம்டி நிறுவனம், புதிய நோக்கியா 3310 கருவியின் துருவமுனைப்பட்ட (போலரைஸ்டு) மற்றும் கர்வுடு ஸ்க்ரீன் விண்டோ, சூரிய ஒளியில் நல்ல வாசிப்பு திறனை வழங்கும் என்றும் கூறியுள்ளது.

கேமரா

இந்த புதிய நோக்கியா 3310 கருவி அதன் முன்னோடி போலல்லாமல் ஒரு எல்இடி ப்ளாஷ் கொண்ட ஒரு 2 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்டுள்ளது, செல்பீ கேமரா கிடையாது. இந்த கேமரா எளிய புகைப்படங்களை பதிவு செய்ய உதவும். எனவே உயர் தீர்மான புகைப்படங்களை இந்த கருவியின் மூலம் எதிர்பார்க்க வேண்டாம் என்று வெளிப்படையாக கூறிவிட்டது எச்எம்டி நிறுவனம். இருப்பினும் நோக்கியா 3310 கருவியின் 2எம்பி கேமரா சிறப்பாக செய்லபடுவதை நாம் காண முடிகிறது.

ஸ்னேக் கேம்

ஸ்னேக் கேம் - ஞாபகம் இருக்கிறதா.??? - அந்தக்காலத்து போதையான வீடியோ கேம் ஆன நோக்கியா 3310 பிரபல ஸ்னேக் கேம் ஆனது அப்டேட் செய்யப்பட்டு இந்த புதிய நோக்கியா 3310 கருவியிலும் இடம் பெற்று நம்மை மீண்டும் அடிமைபப்டுத்த வருகிறது.

மல்டிகலர்டு

அதே எளிய நான்கு பொத்தான் கேம் ஆன ஸ்னேக் இந்த புதிய பதிப்பில் அதற்கே உரிய எளிய 2டி கேம் ஆக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒரே மாற்றம் என்னவென்றால் பழைய ஒரு ஒரே வண்ணமுடைய தோற்றத்திற்கு பதிலாக ஒரு மல்டிகலர்டு கலை பாணியில் வெளியாகியுள்ளது.

கொடூரமான பேட்டரி லைஃப்

எல்லாவற்றிக்கும் மேலாக நவீன கால ஸ்மார்ட்போன்களை தூக்கி சாப்பிடும் வண்ணம் புதிய நோக்கியா 3310 ஒரு "கொடூரமான பேட்டரி லைஃப்" கொண்டுள்ளது. பழைய கருவியை விட 10 மடங்கு அதிகமான பேட்டரி திறன் கொண்டு இக்கருவி வெளியிடப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ தளத்தில் இக்கருவி ஒரு மாத காலம் காத்திருப்பு நேரம் மற்றும் 22 மணி நேர பேச்சு நேரம் வழங்குமென்று குறிப்பிடப்பட்டுள்ளது.!

விலை

இந்த புத்தம்புதிய நோக்கியா 3310 கருவியானது அதன் அசலை போன்றே ஒரு மலிவு விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த புதிய தொலைபேசியானது 49 யூரோக்கள் என்ற விலை ஐரோப்பாவில் கிடைக்கும் அதாவது இந்தியாவில் ரூ. 3450/- என்ற விலை நிர்ணயம் பெறும். இந்தியா உட்பட பிற பகுதிகளில் புதிய நோக்கியா 3310 கருவி சார்ந்த விலைகள் அறிவிக்கப்படவில்லை என்ற போதிலும் ரூ.3450/- என்ற ஒரு அடைப்புக்குறிக்குள் தான் விலை நிர்ணயம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க

Pop

Yazhpanam

Health

.