Type Here to Get Search Results !
Tamil TV Channels | Tamil TV Online | Tamil News Live Tamil TV Channels, Tamil TV, Tamil Channels, Tamil TV Online, Tamil TV Live, Tamil News Live, Watch Tamil TV Live. Watch the most popular Tamil TV Channels

உங்க Wi-Fi Router இந்த 4 நிறுவனங்களை சேர்ந்தது என்றால் உடனே மாத்திடுங்க! எச்சரிக்கை

எப்போது 'வொர்க் ஃப்ரம் ஹோம்' என்பது 'நியூ நார்மல்' என்றாகிப்போனதோ, அப்போது முதலே வைஃபை ரவுட்டர் (Wi-Fi Routers) என்பது வீட்டின் அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாகி விட்டது. கேஸ் பில், கரண்ட் பில்லை போல வைஃபை பில்லையும் வீட்டு பட்ஜெட்டில் சேர்க்க தொடங்கி விட்டோம்.

இப்படி நம் WFH வாழ்க்கையோடு பின்னி பிணைந்து விட்ட Wi-Fi வழியாக, அதிக பட்சமாக நாம் சந்திக்கும் ஒரே பிரச்சனை என்னவென்றால், அது மோசமான கனெக்ஷன் மட்டுமே. அது மிகவும் பொதுவான பிரச்சனை; இந்த கட்டுரை அது பற்றியது அல்ல; அதைவிட மோசமான ஒரு பிரச்சனையை பற்றியது!

அதென்ன பிரச்சனை?

அதென்ன பிரச்சனை?

வைஃபை ரவுட்டர்கள் - வெறுமனே வயர்லெஸ் டிவைஸ்களுக்கு இடையே இன்டர்நெட் கனெக்ஷனை 'ரிலே' செய்யும் ஒரு எளிமையான டிவைஸ்களாக தோன்றலாம்.

ஆனால், அதே வைஃபை ரவுட்டர் பலவீனமாக இருக்கும் பட்சத்தில், அதை பயன்படுத்தி உங்களை பற்றிய பல டேட்டாக்களை உங்களுக்கே தெரியாமல் திருடலாம் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா?

இது ஒன்னும் கம்பி கட்டுற கதை இல்லை!

இது ஒன்னும் கம்பி கட்டுற கதை இல்லை!

சும்மா நகைச்சுவை பண்ணதாப்பா.. ஹாலிவுட் சினிமாக்களில் தான் இதெல்லாம் நடக்கும் என்று நீங்கள் கூறி சிரித்தால், உண்மையிலேயே உங்கள் பொழப்பு சிரிப்பா சிரிச்சிடும், பாத்துக்கோங்க!

ஏனெனில் வைஃபை ரவுட்டர்கள்(WIFI Router) வழியாக பரவி, சிஸ்டம்களுக்குள் (லேப்டாப், கம்ப்யூட்டர்) ஊடுருவும் அதிநவீன மால்வேர் ஒன்றை ஹேக்கர்கள் உருவாக்கியுள்ளனர் என்றும், அது குறிப்பிட்ட சில நிறுவனங்களின் வைஃபை ரவுட்டர்களை பாதிக்கும் திறன் கொண்டதாக உள்ளதென்றும் செக்யூரிட்டி வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்!

அந்த மால்வேரின் பெயர் - ZuorAT

அந்த மால்வேரின் பெயர் - ZuorAT

ஸூவர்ஏடி (ZuorAT) என்பது, ஒருவரை பற்றிய டேட்டாக்களை திருடும்போது மிகவும் சிக்கலான முறையில் - தன்னை மறைத்துக்கொண்டு - செயல்படும் திறன் கொண்ட ஒரு மால்வேர் ஆகும்.

Lumen Technologies வழியாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த ZuorAT மால்வேர் ஆனது சில பிரபலமான நிறுவனங்களின் வைஃபை ரவுட்டர்களை பாதிதுள்ளது தான் - ஷாக்கிங் நியூஸ்.

அந்த நிறுவனங்களின் பெயர்கள் என்ன? குறிப்பிட்ட வைஃபை ரவுட்டர்களை மாற்றி விடலாமா? இந்த மால்வேர் எப்படி வேலை செய்யும்? இதில் இருந்து விலகியே இருப்பது எப்படி? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

எந்தெந்த நிறுவனங்களின் ரவுட்டர்கள் ஆபத்தில் உள்ளன?

எந்தெந்த நிறுவனங்களின் ரவுட்டர்கள் ஆபத்தில் உள்ளன?

நீங்கள் Asus, Cisco, DrayTek மற்றும் Netgear போன்ற நிறுவனங்களின் வைஃபை ரவுட்டரை பயன்படுத்துகிறீர்கள் என்றால், எச்சரிக்கையாக இருக்கவும். ஏனெனில் மேற்குறிப்பிட்ட நிறுவனங்களின் ரவுட்டர்கள் ZuorAT மால்வேர் மூலம் பாதிக்கப்பட்டுள்ளன என்பது கண்டறியப்பட்டுள்ளது.

எல்லாவற்றை விடவும் மோசமான தகவல் என்னவென்றால், இந்த மால்வேர் டார்கெடட் நெட்வொர்க்குகளின் "விளிம்பில்" பல ஆண்டுகளாக கண்டறியப்படாமல் உலா வந்து கொண்டிருக்கிறது என்பது தான்.


அசால்ட் ஆக திருடுமாம்; தப்பிப்பது எப்படி?

ரவுட்டர் தொடர்பான சைபர் தாக்குதல்கள் மிகவும் பொதுவானவை என்றாலும் கூட, இந்த மால்வேர் ஒரு அதிநவீன கட்டமைப்பைக் கொண்டுள்ளதால், இதனால் பெரிய அளவிலான டேட்டாக்களை கூட திருட முடியுமாம்.

ZuorAT மால்வேரால்(Malware), வைஃபை ரவுட்டர் வழியாக பரவி Windows, macOS மற்றும் Linux டிவைஸ்களுக்கான(Devices) அணுகலை ஹேக்கர்களுக்கு வழங்க முடியுமாம்.

மிகவும் டெக்னிக்கல் ஆக பேசுவதை நிறுத்திவிட்டு உங்களில் பெரும்பாலானோர் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விடயத்திற்கு வருவோம்.

ரீபூட் செஞ்சாலே பாதி பிரச்சனை தீர்ந்து விடும்!

ரீபூட் செஞ்சாலே பாதி பிரச்சனை தீர்ந்து விடும்!

Lumen Technologies-இன் ஒரு அறிக்கையின்படி, "வைஃபை ரவுட்டர் யூசர்கள் தொடர்ந்து தங்கள் ரவுட்டர்களை ரீபூட் செய்வது மற்றும் செக்யூரிட்டி அப்டேட்ஸ் மற்றும் பேட்ச்களை இன்ஸ்டால் செய்வது போன்ற பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

கூடுதலாக, ரவுட்டர் ஃபார்ம்வேரை லேட்டஸ்ட் வெர்ஷனுக்கு அப்டேட் செய்து வைத்திருப்பதும் புத்திசாலித்தனமான செயல் தான், இது மால்வேர் தாக்குதல் உட்பட வைஃபை ரவுட்டர் தொடர்பான பல சிக்கல்களையும் சரிசெய்ய உதவும்.

மேலும் யூசர்கள் தங்கள் டேட்டா(Data) மற்றும் ஆப்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க தங்கள் Windows மற்றும் Linux டிவைஸ்களில் ஆன்டி-மால்வேர் ப்ரொடெக்ஷன்(Anti Malware Protection ) சேவைகளையும் பயன்படுத்தலாம்.

Post a Comment

0 Comments

List Grid

6/lgrid/recent