நம்மில் பெரும்பாலானோர் ஸ்மார்ட்போனை (smartphone) எங்காவது மறந்து வைத்துவிட்டு, அதை எங்கு வைத்தோம் என்று தெரியாமல் தேடி அலைவோம். மொபைல் தொலைந்துவிட்டதா என்று நெஞ்சம் படபடக்கும் நேரம் இருக்கிறதே... ஐயகோ.! அதை வெறும் வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. சிலருக்குப் பதட்டம் அதிகரித்து, இருதயம் குதிரை போல் வேகமாக ஓட்டம் பிடிக்கத் துவங்கிவிடும்.
உங்கள் ஸ்மார்ட்போனை தொலைத்து விட்டீர்களா? என்ன செய்வதென்று தெரியலையா?
இந்த மாதிரியான நேரத்தில், நாம் உடனே அருகில் இருக்கும் நபரிடம் நம் போன் நம்பரை டயல் செய்து அழைக்க வற்புறுத்துவோம். பின்னர், உங்கள் போன் ஒலிக்கும் ரிங்-டோன் சத்தத்தை வைத்து அது எங்கிருக்கிறது என்று கண்டுபிடித்துவிடுவோம். ஆனால், உங்கள் போன் சைலன்ட் மோட் (silent mode) அல்லது வைபிரேஷன் மோட் (vibration mode) இல் இருந்தால் உங்கள் நிலைமை மோசமாகிவிடும். டென்ஷன் எகிறிவிடும்..
இந்த ட்ரிக் தெரிந்தால்... அடுத்தவர் உதவி தேவையில்லை.!
வேறு ஒரு எண்ணில் இருந்து நீங்கள் உங்கள் போனை அழைக்க முயன்றாலும், உங்கள் போன் சத்தம் எழுப்பாமல் அமைதியாக மறைந்தே இருக்கும்.
இனி இந்த கவலையே வேண்டாம், இப்படி உங்கள் போனை எங்கு மறந்து வைத்தீர்கள் என்று தெரியாமல், அடுத்தவரின் உதவியுடன் தேட வேண்டிய அவசியமே இனி இல்லை.
இப்போது நாங்கள் சொல்லி கொடுக்கப் போகும் ட்ரிக்கை பயன்படுத்தினால், கை தட்டி உங்கள் போனை கண்டுபிடிக்கலாம்.
கை தட்டினா ஆட்டோ வரும்னு தெரியும்.! போன் கூடவா வரும்?
உண்மையாகத் தான் சொல்கிறோம்.! உங்கள் ஸ்மார்ட்போனை நீங்கள் எங்கு மறந்து வைத்துவிட்டுச் சென்றாலும், உங்கள் கைகளைத் தட்டி அவற்றை எளிதில் கண்டுபிடிக்கலாம்.
'என்னப்பா கை தட்டினா ஆட்டோ வரும்னு சூப்பர் ஸ்டார் சொல்ற மாதிரியில நீங்கள் சொல்றீங்க.'. என்று சிலர் கேளிக்கையாகக் கூட நினைக்கலாம். இனி கை தட்டினால் ஸ்மார்ட்போன் தானாக உங்கள் கைக்கே வரும்.
சைலன்ட் மோட் இல் கூட இனி உங்கள் ஸ்மார்ட்போன் உங்கள் கை தட்டிற்கு கட்டுப்படும்.!
உண்மையிலேயே, கை தட்டினால் உங்கள் போன் இருக்கும் இடத்தை இனி தானாக நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.
குறிப்பாக, உங்கள் ஸ்மார்ட்போன் சைலன்ட் மோட் அல்லது வைபிரேஷன் மோட் இல் இருந்தாலும் கூட, நீங்கள் கை தட்டி கூப்பிட்டால், உங்கள் ஸ்மார்ட்போன் தான் இருக்கும் இடத்தை சத்தம் போட்டுக் காட்டி கொடுத்துவிடும்.
சரி, இந்த சுவாரசியமான ட்ரிக்கை எப்படிச் செய்வதென்று பார்க்கலாம் வாங்க.
கை தட்டி போனை கண்டுபிடிப்பது எப்படி?
- முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் Google Play Store ஓபன் செய்து கொள்ளுங்கள்.
- பிறகு Clap To Find என்ற ஆப்ஸை சர்ச் செய்யுங்கள்.
- இப்போது காண்பிக்கப்படும் ஆப்ஸ் பட்டியல்களில் இருந்து Clap To Find (Frimus) என்ற பெயரில் இருக்கும் ஆப்ஸை கிளிக் செய்யுங்கள்.
- இந்த Clap To Find ஆப்ஸை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யுங்கள்.
- இப்போது இன்ஸ்டால் செய்யப்பட்ட Clap To Find ஆப்ஸை ஓபன் செய்யுங்கள்.
- இப்போது Clap to Start என்ற விருப்பம் காண்பிக்கப்படும், அதை கிளிக் செய்யுங்கள்.
- இப்போது, இந்த ஆப்ஸ் உங்களை 3 முறை கை தட்டச் சொல்லிக் கோரும்.
- 3 முறை கைகளை உரக்கத் தட்டி உங்கள் சத்தத்தைப் பதிவு செய்துகொள்ளுங்கள்.
- இறுதியாக Ok என்ற விருப்பத்தை கிளிக் செய்யுங்கள்.
3 முறை உரக்க கிளாப் செய்யுங்கள் மக்களே.!
- இப்போது உங்கள் கை தட்டல் சேவ் செய்யப்பட்டுவிடும்.
- இனி நீங்கள் கை தட்டினால் போதும், உங்கள் ஸ்மார்ட்போன் உடனே ரிங் செய்யத் துவங்கிவிடும்.
- இன்னும் கூடுதல் சிறப்பான அனுபவத்தைப் பெற, Clap To Find ஆப்ஸின் Settings மெனு செல்லுங்கள்.
- இப்போது Sound, Vibrate மற்றும் Flash என்று மூன்று விருப்பங்கள் காண்பிக்கப்படும்.
- இதில் ஏதேனும் ஒரு விருப்பத்தை நீங்கள் ஆக்டிவேட் செய்யலாம் அல்லது மூன்றையும் கூட ஆக்டிவேட் செய்யலாம்.
இனி நீங்கள் கை தட்டினால் போதும்.. உங்கள் போன் தானாக சத்தம் கொடுக்கும்.!
சத்தம் மட்டுமில்லை இல்லை.. உங்கள் போன் இன்னும் என்னென்ன செய்யும் தெரியுமா?
இதை ஆக்டிவேட் செய்வதன் மூலம், நீங்கள் கை தட்டும் போது உங்கள் ஸ்மார்ட்போன் ரிங் டோனை சத்தமாக எழுப்புவதுடன், சேர்த்து வைபிரேஷன் மற்றும் LED பிளாஷ் லைட்டை ஆஃப் (Off) செய்து, பிறகு ஆன் (On) செய்து தொடர்ந்து காண்பிக்கும்.
இதன் மூலம், மறந்து வைத்த உங்கள் போனை இன்னும் சுலபமாக உங்களால் அடையாளம் காண முடியும்.
இந்த சென்சிட்டிவிட்டி செட்டிங்கை மட்டும் செக் செய்ய மறக்காதீங்க.!
இன்னும் கூடுதல் சிறப்பான அனுபவத்திற்கு நீங்கள் உங்களுக்கு பிடித்தமான ரிங் டோன் மற்றும் அதன் வால்யூம் அளவை கூட செட்டிங் சென்று மாற்றி அமைக்கலாம்.
இதைச் செய்வதற்கு நீங்கள் செட்டிங்ஸ் மெனுவில் உள்ள Ringtone Volume என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
அதேபோல், Alert Settings என்ற விருப்பத்தை கிளிக் செய்து, அதில் Sensitivity என்ற விருப்பத்தை கிளிக் செய்து 50% வைத்துக்கொள்ளுங்கள்.
இனி ஈஸியா கை தட்டி போனை அலற விடலாம்.!
இல்லையென்றால், சிறிய சத்தம் கேட்கும் போது கூட, உங்கள் போன் தானாக ரிங் அடிக்க துவங்கிவிடும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
இப்படி ஒரு ஆப்ஸை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது உங்கள் தனிப்பட்ட விருப்பம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
கை தட்டினால் போன் தானாக ஒளிக்கும் ட்ரிக்கை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
Post a Comment
0 Comments