Type Here to Get Search Results !
Tamil TV Channels | Tamil TV Online | Tamil News Live Tamil TV Channels, Tamil TV, Tamil Channels, Tamil TV Online, Tamil TV Live, Tamil News Live, Watch Tamil TV Live. Watch the most popular Tamil TV Channels

மொபைல் போன் பயன்படுத்தும் போது கட்டைவிரலின் இந்த பகுதி வலிக்கிறதா.?

உங்கள் கட்டைவிரல்கள் வழக்கத்தை விட சற்று பலவீனமாக இருக்கிறது என்று கூறினால் நீங்கள் அதை ஒற்றுக்கொண்டே ஆக வேண்டும். ஏனென்னில் நாம் ஒரு நவநாகரீகமான "எதற்கெடுத்தாலும் ஸ்மார்ட்போன்" என்ற காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
நீங்கள் வைத்திருப்பது ஒரு சாதாரணமான பீச்சர் மொபைலாக இருந்தாலும் சரி அல்லது பெஸல்களே இல்லாத முழுமையான டச் ஸ்க்ரீன் ஸ்மார்ட்போனாக இருந்தாலும் சரி - உங்களால் உங்கள் போனை எப்பொழுதும் நோண்டாமல் இருக்க முடிவதில்லை. அதன் விளைவு என்ன தெரியுமா.? - பலவீனங்கள்.!


சரி மீண்டும் விடயத்திற்கு வருவோம். உங்கள் கட்டைவிரல்கள் பலவீனமாக இருக்கிறது என்றால் உங்கள் விருப்பமான உரையாடல் பயன்முறை என்பது டெக்ஸ்டிங் மட்டும் தான் என்று அர்த்தம். இது தவறு என்று கூறவில்லை ஏனெனில் நாங்கள் உங்களை முற்றிலும் உணர்கிறோம். ஒரு கட்டத்தில் மெஸேஜ் டைப் செய்யமுடியாத வண்ணம் கட்டைவிரல்கள் மருத்துப்போகும் அல்லவா.?? அப்போது நாங்கள் சொல்வதையும் மருத்துவர்கள் சொல்வதையும் நீங்கள் உணர்வீர்கள்.!

ஆபத்து உண்டாகும் வாய்ப்புகள்
 

ஆபத்து உண்டாகும் வாய்ப்புகள்

தொடர்ந்து டெக்ஸ்டிங் செய்துகொண்டே இருக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு 'ஸ்மார்ட்போன் தம்ப்' எனப்படும் மருத்துவ நிலை ஆபத்து உண்டாகும் வாய்ப்புகள் என்று டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள். ஸ்மார்ட்போன் தம்ப்.? - அப்படியென்றால் என்ன.?
கீல்வாதம் போன்ற நிலைக்கு

கீல்வாதம் போன்ற நிலைக்கு

இந்த ஸ்மார்ட்போன் தம்ப் என்பது மருத்துவ சொற்களில் தசைநாண் அழற்சிகள் என்று அறியப்படுகிறது. அதாவது ஒரு ஸ்மார்ட்போனில் தட்டச்சு செய்யும் செயல்பாட்டில் கட்டைவிரலை மீண்டும் மீண்டும் இயக்கக்கூடிய தூண்டுதலாகும். இந்த இயக்கம் மூலம் ஒரு கீல்வாதம் போன்ற நிலைக்கு உங்களின் கட்டைவிரல் செல்லும் நிலை உண்டாகும், இது தொடர்ந்து வலியும் ஏற்படுத்தும்.
கட்டைவிரலை வளைப்பதின் மூலம்

கட்டைவிரலை வளைப்பதின் மூலம்

முன்னதாக, தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு குறிப்பாக கைத்தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்குத்தான் இந்த நிலைதான் அதிகமாக இருந்தது. எப்போது ஸ்மார்ட்போன்கள் நம் வாழ்க்கையில் இன்னும் கூடுதலாக ஆக்கிரமிக்க ஆரம்பித்ததோ அன்றுமுதல் இந்த நிலைகளின் அதிர்வெண் அனைவருக்கும் பொதுவான ஒன்றாக அதிகரித்தது. ஸ்மார்ட்போன் தம்ப் மூலம் பாதிக்கப்பட்ட மக்களின் வலிக்கு கட்டைவிரலை வளைப்பதின் மூலம் வளைக்கும் பொறுப்புடைய தசைநூலில் ஏற்படும் வீக்கம் காரணமாக திகழ்கிறது.
அனைத்துமே மோசமானவை

அனைத்துமே மோசமானவை

ஸ்மார்ட்போன்கள் நம் கைகளில் எவ்வகையான சிக்கல்களை ஏற்படுத்துகின்றன என்று பார்க்கும்போது, தசைநாண் அழற்சி மற்றும் ஸ்மார்ட்போன் பயன்பாடு ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பை விளக்கும் வகையில் ரோபோஸ்டரில் உள்ள மயோ கிளினிக்கின் உயிரிமருத்துவ பொறியியலாளரான கிறிஸ்டின் ஜாவோ அளிக்கும் விளக்கம் என்னவென்றால் : "நாம் நமது தொலைபேசிகளை வைத்திருக்கும் நிலை மற்றும் அவற்றை இயக்குவதற்கு தேவையான கட்டைவிரல் இயக்கங்கள் ஆகிய அனைத்துமே மோசமானவை" என்கிறார்.
வேறுபட்ட எலும்புகளை

வேறுபட்ட எலும்புகளை

கருதுகோள்களில் ஒன்று "மூட்டுகள் தளர்வானதாகவும், மெதுவாகவும் இருக்கின்றன, அதனால் தான் அவைகள் சாதாரண நிலைமையில் இருப்பதைவிட வேறுபட்ட எலும்புகளைத் தூண்டுகின்றன. இது கட்டைவிரல் வழியாக சில சக்திகளுக்கு தேவைப்படும் இயக்கமாகும். இதுபோன்ற இயக்ககங்களை விண்வெளியில் செயல்படுத்த இயலாது" என்கிறது.
அசாதாரண இயக்கங்களை செலுத்த

அசாதாரண இயக்கங்களை செலுத்த

ஆக கட்டைவிரல் எலும்புகள் மீது அசாதாரண இயக்கங்களை செலுத்த அது வலியை ஏற்படுத்தும் மற்றும் இறுதியில் கீல்வாதம் ஏற்படுத்தும் என்று எங்கள் கருதுகோள் கூறுகிறது என்று கிறிஸ்டின் ஜாவோ எச்சரிக்கிறார்.
இதை நாம் தடுக்க முடியுமா?

இதை நாம் தடுக்க முடியுமா?

மருத்துவர்கள் இந்த ஸ்மார்ட்போன் தம்ப்-தனை முற்றிலும் தடுக்கக்கூடியது என்றே கருதுகின்றனர். நீண்ட உரை செய்திகளைத் தட்டச்சு செய்வதற்குப் பதிலாக, அவற்றை குறுகிய மற்றும் முக்கிய புள்ளியுடன் முடித்துக்கொள்ளவும். இதனால் உங்கள் கைகள் மற்றும் மணிகட்டைக்கு நீங்கள் கொடுக்கும் அழுத்தம் குறைக்கப்படும்.
ஸ்வைப், ஆட்டோகரெக்ட்

ஸ்வைப், ஆட்டோகரெக்ட்

உங்களிடம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் இருந்தால் உங்கள் உரை செய்திக்கு ஸ்வைப் அம்சத்தைப் பயன்படுத்தவும். இது மிகவும் இயற்கையான இயக்கங்களை கொண்டுள்ளதால் உங்கள் கட்டைவிரலை பாதிக்காமல் வைத்திருக்கலாம். பல ஸ்மார்ட்போன்கள் ஆட்டோகரெக்ட் தன்னியக்க அம்சத்தை உள்ளடக்கிய கீபோர்டுகளைக் கொண்டிருக்கின்றன. இதைப் பயன்படுத்தி உங்கள் செய்திகளை தானாகவே திறமையாக எழுத பழகிக்கொள்ளுங்கள். எந்நேரமும் தட்டச்சு செய்வதை குறைத்துக்கொள்ளுங்கள்.
இரண்டு கைகளாலும்

இரண்டு கைகளாலும்

ஒரே கையில் ஸ்மார்ட்போனை பிடித்துக்கொண்டு அதே கையில் உள்ள கட்டைவிரல்பயன்படுத்தி டைப் செய்யும் பழக்கத்தை மாற்றுங்கள். அதற்கு மாறாக இரண்டு கைகளாலும் கருவியை பிடித்து இரண்டு கட்டைவிரல்களையும் பயன்படுத்தினால் ஒரே ஒரு கட்டைவிரல் அதிக பளுவிற்கு ஆளாகாது.
ஐஸ்கட்டிகளை வைத்து ஒத்தடம்

ஐஸ்கட்டிகளை வைத்து ஒத்தடம்

அதிக நேரம் வீடியோ கேம் விளையாடுவதை தவிர்க்கலாம். சிறிய அளவிலான உடற்பயிற்சிகளை நிகழ்த்தலாம், முக்கியமக விரல்களுக்கு கவனம் கொடுங்கள். ஒருவேளை அதீத ஸ்மார்ட்போன் பயன்பாடு விளைவால் விரல்களில் வீக்கம் அல்லது வலி ஏற்பட்டால் உடனே ஐஸ்கட்டிகளை வைத்து ஒத்தடம் கொடுக்கவும் முடிந்த வேகத்தில் மருத்துவரை அணுகவும்.
 

List Grid

6/lgrid/recent