மதுரையில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து, இன்று ஏறத்தாழ பல நூறு கோடிகளுக்கு சொந்தக்காரராக திகழ்கிறார் சுந்தர் பிச்சை.
_______________________________
பிச்சை சுந்தராஜன் பிறந்தநாள் இன்று ஜூலை 12,1972ல் மதுரையில் பிறந்த தமிழன்.
________________________________
எளிமை!
இவரது குடும்பம் மிகவும் எளிமையானது, ஆடம்பரமானது அல்ல. டிவியோ, பயணிக்க கார் போன்றவை கூட காணாத குடும்பத்தில் பிறந்தவர் தான் சுந்தர் பிச்சை.
பொறியியல் இரத்தம்!
சுந்தர் பிச்சையின் தந்தை ரகுநாத் பிச்சையும் பொறியியலாளர் தான். இவர் எலக்ட்ரிக்கல் இஞ்சினியர் ஆவார். சென்னையில் பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊக்கம்!
தனது தந்தை தன்னுடன் பகிர்ந்து கொண்ட கதைகள் மூலமாக தான் சுந்தர் பிச்சை ஆரம்பக்காலத்தில் நிறைய ஊக்கம் பெற்றார்.
தொழில்நுட்பம்!
தனது பன்னிரண்டு வயதில் சுந்தர் பிச்சை தனது கையில் எடுத்த முதல் தொழில்நுட்பம் லேண்ட்லைன் போன்.
திறன் வாய்ந்தவர்!
தான் டயல் செய்யும் எல்லா நபரையும் நினைவில் வைத்துக் கொள்ளும் திறன் கொண்டிருந்தார் சுந்தர் பிச்சை.
ஆல் - ரவுண்டர்!
தொழில்நுட்பம் தவிர விளையாட்டிலும் கெட்டிக்காரர் சுந்தர் பிச்சை. பள்ளி கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் திகழ்ந்துள்ளார் சுந்தர்.
சிறந்த இடங்களில் படிப்பு!
ஐ.ஐ.டி கரக்பூரில் பட்டப்படிப்பு, ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் எம்.பி.எ படித்தவர் சுந்தர் பிச்சை.
கூகிள்!
கூகிள் உடன் 2004-ல் இணைந்தார் சுந்தர் பிச்சை. டூல்பார், கூகிள் கியர்ஸ், கூகிள் பேக், கூகிள் குரோம் போன்ற பிராடக்ட்களில் பணிபுரிந்தார் இவர்.
கூகிள் தல!
பிறகு கடந்த 2015-ம் ஆண்டு கூகிள் தலைவர் லாரி பேஜ் ஓய்வு பெற்று சுந்தர் பிச்சையை கூகிளின் தலைமை நிர்வாக அதிகாரியாக அறிவித்தார்.
வலிமையான போட்டியாளர்!
மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாடெல்லாவிற்கு சரியான போட்டியாளர் சுந்தர் பிச்சை தான்.
காதல்!
தனது நீண்ட நாள் காதலியும், உடன் பயின்றவருமான அஞ்சலியை திருமணம் செய்து கொண்டார் சுந்தர் பிச்சை.
பிள்ளைகள்!
இவர் இரண்டு குழந்தைகளுக்கு தந்தை. சுந்தர் பிச்சைக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள்.
புரூக்ளின்!
மதுரையில் பிறந்த சுந்தர் பிச்சை இன்று நியூயார்க் புரூக்ளின் பகுதியில் சொந்த வீட்டில் வசித்து வருகிறார். இதன் மதிப்பு 6.8 மில்லியன் டாலர்கள் ஆகும்.
மில்லியனர்!
தற்போதைய சுந்தர் பிச்சையின் நிகர சொத்து மதிப்பு 150 மில்லியன் டாலர்கள் ஆகும்.
தமிழராலும் உலகின் மிகப் பெரிய நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் அமர முடியும், சாதிக்க முடியும் என நிருபித்து காட்டியவர் சுந்தர் பிச்சை. தமிழரின் திறமையை உலகுக்கு வெளிக்காட்டியவர்.

Social Plugin
Social Plugin