Type Here to Get Search Results !
Tamil TV Channels | Tamil TV Online | Tamil News Live Tamil TV Channels, Tamil TV, Tamil Channels, Tamil TV Online, Tamil TV Live, Tamil News Live, Watch Tamil TV Live. Watch the most popular Tamil TV Channels

விண்வெளியில் நடந்த முதல் மனிதர் காலமானார்!

சோவியத் யூனியன் என முன்னர் அழைக்கப்பட்ட ரஷ்யாவை சேர்ந்த விண்வெளி வீரர் அலெக்சி லியோனோவ் 18-3-1965 அன்று வோஸ்கோட் - 2 விண்கலத்தை விட்டு வெளியேறி விண்வெளியில் 12 வினாடிகள் நடந்து சாதனை படைத்தார்.

விண்வெளி ஆய்வில் மிகப்பெரிய மைல்கல்லாக வியக்கப்பட்ட இந்த அரிய வரலாற்று சிறப்புக்குரிய சாதனையை ஏற்படுத்திய அலெக்சி லியோனோவ் சமீபகாலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், அலெக்சி லியோனோவ் சிகிச்சை பலனின்றி தனது 85 வயதில் இன்று காலமானார் என அவரது உதவியாளர் தெரிவித்துள்ளார்.

மரணமடைந்த அலெக்சி லியோனோவ் ரஷ்ய இராணுவத்திலும் பின்னர் விமானப்படையிலும் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.



விண்வெளியில் நடந்த முதல் மனிதர் காலமானார்

List Grid

6/lgrid/recent