விண்டோஸ் 10 இயங்குதளம் மூலம் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது இயங்குதளத்தை முற்றிலுமாக மாற்றியமைத்தது. இயங்குதளத்தில் புதிய வடிவமைப்பு, யூசர் இன்டர்ஃபேசில் மாற்றங்கள் செய்யப்பட்டு பயன்பாடு மிகவும் எளிமையாக்கப்பட்டது. விண்டோஸ் இயங்குதளங்களில் தீம்ஸ் அம்சம் சிலகாலமாக வழங்கப்பட்டிருக்கிறது.
எனினும், இன்டர்ஃபேசை டார்க் மோடில் தோன்றவைக்க பயனர்கள் பிளாக் தீம் பயன்படுத்த வேண்டிய நிலை நிலவுகிறது. இதற்கென பயனர்கள் மூன்றாம் தரப்பு மென்பொருள்களை பயன்படுத்த வேண்டும். சமீபத்திய அப்டேட் மூலம் மைக்ரோசாப்ட் நிறுவனம் டார்க் மோட் ஆப்ஷனை செட்டிங்களில் வழங்கியிருக்கிறது. இதன் மூலம் முழு யூசர் இன்டர்ஃபேசையும் இருளாக மாறிவிடும். இதனை எப்படி செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
தேவையானவை:
- விண்டோஸ் 10 இயங்குதளத்தை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்யவும்.
- விண்டோஸ் 10 இயங்குதளத்தின் புதிய பதிப்பை டவுன்லோடு செய்ய, ஸ்டார்ட் மெனு சென்று செட்டிங் ஆப்ஷனை தேர்வு செய்யவும். இனி அப்டேட் மற்றும் செக்யூரிட்டி ஆப்ஷனில் விண்டோஸ் அப்டேட் ஆப்ஷனை க்ளிக் செய்யவும். இனி செக் நௌ பட்டனை க்ளிக் செய்தால் அப்டேட் டவுன்லோடு மற்றும் இன்ஸ்டால் ஆகும்.
பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:
1: விண்டோஸ் 10 சாதனத்தின் செட்டிங்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்யவும் - ஸ்டார்ட் மெனுவில் கியர் ஐகானை க்ளிக் செய்து செட்டிங்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
2: பெர்சனலைசேஷன் - இனி பெர்சனலைசேஷன் ஆப்ஷன் சென்று வால்பேப்பர், தீம்ஸ் மற்றும் கலர்ஸ் தொடர்பான செட்டிங்களை மாற்றவும்
3: கலர்ஸ் ஆப்ஷன் - இடதுபுறம் இருக்கும் கலர்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்து யூசர் இன்டர்ஃபேஸ் ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.
4: இனி கீழ்புறமாக ஸ்வைப் செய்து 'Choose your default app mode’ ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
5: இனி டார்க் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
6: இவ்வாறு செய்ததும், ஒட்டுமொத்த யூடர் இன்டர்ஃபேசும் தானாக டார்க் மோடிற்கு மாற்றப்பட்டு விடும்.
Social Plugin
Social Plugin