Type Here to Get Search Results !
Tamil TV Channels | Tamil TV Online | Tamil News Live Tamil TV Channels, Tamil TV, Tamil Channels, Tamil TV Online, Tamil TV Live, Tamil News Live, Watch Tamil TV Live. Watch the most popular Tamil TV Channels

செயற்கை நிலாக்களை உருவாக்கிய சீனா!!

சீனா: அங்க தொட்டு, இங்க தொட்டு, கடைசியில நிலாவையே டூப்ளிகேட் பண்ண ஆரம்பிக்க போகுது சீனா.
சீனாவின் அபரிமிதமான வளர்ச்சி இயற்கையையும் விட்டு வைக்கவில்லை போலும். மின்சார செலவை குறைப்பதற்காகவும், தெரு விளக்குகளுக்கு பதிலாகவும் சீனா, ரஷ்யா, அமெரிக்காவுக்கு இணையாக நின்று ஒரு புது ஐடியாவை யோசித்தது.
 செயற்கை கோள்

செயற்கை கோள்

அதன்படி, செயற்கை நிலவை உருவாக்கிவிட்டால் எந்த வீண் செலவும் வராது, நாடும் எப்பவுமே பளிச்னு இருக்கும் என்று முடிவெடுத்தது. தற்போது செயற்கை நிலாக்கள் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கை நிலவுகளுக்கு செயற்கை கோள்கள் மூலம் சக்தி பெரும் வகையில் வடிவமைக்கப்படுமாம்.
 2022-க்குள் முடியும்

2022-க்குள் முடியும்

இதற்கான சோதனையும் நடந்து முடிந்துவிட்டதால், எப்படியாவது வருகிற 2022-ம் ஆண்டிற்குள் இந்த திட்டம் முடிந்துவிடும் என்றும், அதற்குள் மேலும் மூன்று செயற்கை நிலாக்களை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி செயற்கை நிலவுகள் வந்துவிட்டால் நாடு எப்போதுமே பளிச்சென்றுதான் இருக்கும்.
 8 மடங்கு ஒளி

8 மடங்கு ஒளி

மின்வசதி இல்லாத கிராமப்பகுதிகளுக்கு இந்த செயற்கை நிலா வெளிச்சம் பெரிய வரப்பிரசாதமாக இருக்கும். அதுமட்டுமில்லாமல், வெள்ளம், பேரிடர் போன்ற காலங்களில் நாடே இருளில் மூழ்கிவிட்டாலும் இருக்கவே இருக்கிறது செயற்கை நிலா. இது இயற்கையான நிலாவைவிட 8 மடங்குஒளி தரக்கூடியதாம். அதாவது இந்த செயற்கை நிலவால், 10 முதல் 80 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு ஒளியைப் பாய்ச்ச முடியுமாம்.

புத்தம் புது முயற்சி

சூரியனிடமிருந்து வெளிச்சத்தை நிலா வாங்கினால், இந்த நிலாவிலிருந்து வெளிச்சத்தை சீனா வாங்கி இப்படி ஒரு திட்டத்தை மேற்கொண்டுள்ளது. நிலாவில் போய் வாழலாம் என்ற பேச்சு அடிபட்டதுபோய், இப்போது நிலாவையே பூமிக்கு வரவழைக்க புத்தம் புது முயற்சியில் இறங்கிஉள்ளது சீனா.

List Grid

6/lgrid/recent