Type Here to Get Search Results !
Tamil TV Channels | Tamil TV Online | Tamil News Live Tamil TV Channels, Tamil TV, Tamil Channels, Tamil TV Online, Tamil TV Live, Tamil News Live, Watch Tamil TV Live. Watch the most popular Tamil TV Channels

வாட்ஸ்ஆப்பை விட கூகுள் அல்லோ பயன்படுத்த ஏழு காரணங்கள்!!!

உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் குறுந்தகவல் செயலியாக வாட்ஸ்ஆப் இருக்கின்றது. வாட்ஸ்ஆப் போன்ற சேவைகளை வழங்கும் பல்வேறு செயலிகள் பயன்பாட்டில் இருந்தாலும் இவை எதுவும் வாட்ஸ்ஆப் அளவு பிரபலமடையவில்லை.
இந்த நிலையை முற்றிலுமாக மாற்றக் களத்தில் குதித்த கூகுள், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது என்றே கூற வேண்டும். வாட்ஸ்ஆப், பேஸ்புக் மெசன்ஜர் உள்ளிட்ட செயலிகளுக்கு போட்டியாகக் கூகுள் சார்பில் அறிமுகம் செய்யப்பட்ட செயலி தான் கூகுள் அல்லோ. அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து இதுவரை 5 மில்லியன் டவுன்லோடுகளை கடந்து தொடர்ந்து முன்னிலையில் இருக்கின்றது.
என்ன இருந்தாலும் வாட்ஸ்ஆப் போன்று வருமா எனக் கேட்பவர்கள், வாட்ஸ்ஆப் தவிர்த்து கூகுள் அல்லோவை பயன்படுத்த இங்கு வழங்கப்பட்டிருக்கும் ஏழு காரணங்களையும் பாருங்கள்..

கூகுள் அசிஸ்டண்ட்

கூகுள் அல்லோ செயலியில் கூகுள் அசிஸ்டண்ட் சேவையும் வழங்கப்படுகின்றது. இதன் மூலம் கூகுள் தேடல் மற்றும் விர்ச்சுவல் அசிஸ்டண்ட் சேவைகளை ஒரே செயலியில் பெற முடியும். இதில் யூட்யூப் வீடியோ சேவைகளும் அடங்கும். இத்துடன் அல்லோ பயன்படுத்தி அழைப்புகளையும் மேற்கொள்ள முடியும்.

ஸ்மார்ட் ரிப்லை

கூகுள் அல்லோ செயலியின் ஸ்மார்ட் ரிப்லை ஆப்ஷன் ஜிமெயில் செயலியின் இன்பாகாஸ் ஆப்ஷன் போன்றதாகும். இந்த அம்சமானது ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருக்கும் பதில்களை பரிந்துரை செய்யும். இந்த அம்சம் செயற்கை நுண்ணறிவு மூலம் தரவுகளை படித்து அதற்கு ஏற்ப பதில்களை வழங்கும்.

இன்காக்னிட்டோ மோட்

குறுந்தகவல்களில் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என்பதால் கூகுள் தனது செயலியில் இன்காக்னிட்டோ மோட் வழங்கியுள்ளது. இது தனிப்பட்ட சாட்களை மேற்கொள்ள வழி செய்யும். ஒரு பயனர் இன்காக்னிட்டோ மூலம் குறுந்தகவல் பெறும் போது லாக்ஸ்கிரீன் தோன்றும், இதனால் குறுந்தகவல் பாதுகாக்கப்படுகின்றது.

இமேஜ் ரிகக்னீஷன்

கூகுள் அல்லோவில் இமேஜ் ரிகக்னீஷன் அம்சம் அறிவார்ந்த பதில்களை வழங்கும்.            இது ஒவ்வொரு புகைப்படங்களையும் கண்டறிந்து அதற்கேற்ப பதில்களை பரிந்துரை            செய்யும்.

டூடுள்

புகைப்படங்களை அனுப்பும் முன் அவற்றில் எழுத்துக்களைப் பதிவு செய்து மற்றவர்களுக்கு அனுப்பும் வசதி கூகுள் அல்லோ செயலியில் வழங்கப்பட்டுள்ளது.

டைமர்

இந்தச் செயலியின் முக்கியமான அம்சமாக இது இருக்கின்றது. தேவைப்பட்டால் சிறிது நேரம் கழித்து அழிக்கப்பட வேண்டிய குறுந்தகவல்களுக்கு நேரம் செட் செய்து வைக்க முடியும். இதனால் செட் செய்யப்பட்ட நேரத்தில் குறுந்தவல் தானாக அழிக்கப்பட்டு விடும்.

வார்த்தை அளவு

பயனர்களுக்குச் சிறப்பான அனுபவத்தை வழங்க வார்த்தைகளை வித்தியாசம் ஏற்படுத்தும் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கென இரு ஸ்லைடர் பட்டன்களை 'Whisper' மற்றும் 'Shout' வழங்கியுள்ளது. இவற்றைப் பயன்படுத்தி பயனர்கள் வார்த்தைகளைப் பெரிதாக்குவது அல்லது அளவை குறைக்கச் செய்யலாம்.

List Grid

6/lgrid/recent