Type Here to Get Search Results !
Tamil TV Channels | Tamil TV Online | Tamil News Live Tamil TV Channels, Tamil TV, Tamil Channels, Tamil TV Online, Tamil TV Live, Tamil News Live, Watch Tamil TV Live. Watch the most popular Tamil TV Channels

உங்களின் ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் மொபைல்போனில் தமிழில் டைப் செய்வது எப்படி.?!!!

வாட்ஸ்ஆப்பில் அழகிய தமிழில் தகவல்கள் பரிமாறக்கொள்ள விரும்புகிறீர்களா.?? அல்லது முகநூல் பக்கத்தில் உங்களின் புரட்சிமிக்க கருத்துக்களை தமிழில் போஸ்ட் செய்ய விரும்புகிறீர்களா.?? அல்லது உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன், டேப்ளெட் அல்லது பிசியில் தமிழ் மொழி பயன்படுத்தி ஒரு மின்னஞ்சலை உருவாக்க வேண்டுமா.? ஆம் என்றால் - நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கின்றீர்கள்.
ஸ்மார்ட்போன் பயன்பாடுகளின் உதவியுடன் நாம் நமது ஸ்மார்ட்போன்களில் பல அம்சங்களை அனுபவிக்க முடியும். அந்த வகையில் உங்களின் ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் மொபைல்போனில் இங்கு தொகுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றுவதின் மூலம் நீங்கள் உங்களின் வாட்ஸ்ஆப்பில், பேஸ்புக்கில் தமிழில் டைப் செய்ய முடியும்.
வழிமுறை #01

வழிமுறை #01

உங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்தின் மூலம் கூகுள் இண்டிக் கீபோர்ட் என்ற (Google Indic Keyboard) பயன்பாட்டை பதிவிறக்கம் செய்து, நிறுவவும்.
வழிமுறை #02
ஒருமுறை உங்கள் சாதனத்தில் இந்த ஆப் நிறுவப்பட்டதும். அந்த பயன்பாட்டினை உங்கள் ஸ்மார்ட்போன் ஆப் டிராயரில் இருந்து திறக்கவும்.

வழிமுறை #03

இப்போது பயன்பாட்டின் பிரதான திரையில் "எனேபிள் இன் செட்டிங்ஸ்" (Enable in settings) என்ற பொத்தானைத் தட்டவும்.

வழிமுறை #04

இப்போது "கூகுள் எனேபிள் கீபோர்ட்" என்ற ஆப்ஷனை அதன் அருகில் இருக்கும் பெட்டியைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் இயக்கம் பெற செய்ய முடியும் (சில ஆண்ட்ராய்டு தொலைபேசிகளில், செக் பாக்ஸிற்கு பதிலாக ஆஃப் / ஆஃப் பொத்தானை மாற்றாக இருக்கும்)

வழிமுறை #05

பின்னர், அடுத்த திரையில் "செலெக்ட் இன்புட் மெத்தேட்" என்ற பொத்தானைத் தட்டவும். பின்னர் "இங்கிலிஷ் மற்றும் இந்தியன் லேங்குவேஜ்ஸ்" விசைப்பலகை என்பதைத் தேர்வு செய்யவும்.

வழிமுறை #06

அடுத்த கட்டத்தில், கூகுள் அநாமதேய பயன்பாட்டு புள்ளிவிவரங்களை அனுப்ப ஒப்புக்கொள்கிறீர்கள் என்றால் டிக் செய்யவும் அல்லது அதை புறக்கணித்து விட்டு இடது புறம் தேய்க்க "அக்செப்ட்" தேர்வுப்பெட்டியை காண்பீர்கள் அதை தேர்ந்தெடுக்கவும்.

வழிமுறை #07

இப்போது, அடிஷனல் லேங்குவேஜ்ஸ் (கூடுதல் மொழிகள்) விருப்பத்தைத் தட்டவும். பின்னார் "தமிழ் & ஆங்கிலம்" என்ற உள்ளீட்டு முறை பொத்தானை இயக்கவும்.

வழிமுறை #08

இப்போது வாட்ஸ்ஆப்பை திறந்து, நீங்கள் தமிழ் டைப் செய்ய விரும்பும் மெசேஜ் பாக்ஸை தட்டவும். இப்போது திரையில் கூகுள் இன்க் விசைப்பலகை பாப்-அப் ஆவதை காண்பீர்கள்.

வழிமுறை #09

இப்போது நீங்கள் கீபோர்டின் மேல் பக்கம் "இந்திய மொழிகளின்" பொத்தானை பார்ப்பீர்கள், அதை தட்டவும், இப்போது பாப் அப் விண்டோவில் "தமிழ்" மொழியை தேர்ந்தெடுக்கவும்.

வழிமுறை #10

இறுதியாக, தமிழில் தட்டச்சு செய்ய ஒலிபெயர்ப்பு அல்லது நேட்டிவ் விசைப்பலகை (transliteration or Native keyboard mode) முறையை தேர்வு செய்ய உங்களால் தமிழில் டைப் செய்ய முடியும். (உடன் நீங்கள் பின்னர் எப்போது வேண்டுமானாலும் விசைப்பலகை அமைப்பை மாற்றலாம்.
இதே போன்று வைபர் ஆப்ஸ்க்கும் பயன்படுத்தலாம்.

List Grid

6/lgrid/recent